திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

41 ஆண்டு! கரண்ட் இல்லாமல் தவித்த கிராமம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த மனித உரிமை ஆணையம்!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பணிபுரம் என்ற கிராமத்தில் 41 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்துக்கு மின் வசதி வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அருகே உள்ள கிராமம் திருப்பணிபுரம்.

மலை கிராமமான இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின் வசதி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆடிப்பெருக்கு விழா.. அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் கோலாகலம்..மங்கல ஆரத்தி ஆடிப்பெருக்கு விழா.. அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் கோலாகலம்..மங்கல ஆரத்தி

அடிப்படை வசதிகள் இல்லை

அடிப்படை வசதிகள் இல்லை

இதனால் அந்த கிராமத்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்துள்ளனர். எனினும் மின்சார வாரியத்துக்கு கடந்த 1979-ம் ஆண்டே திருப்பணிபுர கிராமத்தை சேர்ந்த மக்கள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதேபோல் விளைவித்த பொருள்களை சந்தைக்கு எடுத்து செல்வதிலும் அந்த கிராம மக்கள் சிரமத்தை சந்தித்து வந்துள்ளனர். குடிநீர் வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.

41 ஆண்டுகளாக மின்வசதி இல்லை..

41 ஆண்டுகளாக மின்வசதி இல்லை..

ஆனால் 41 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த கிராமத்துக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே திருப்பணிபுர கிராமத்தை சேர்ந்த வசந்தி என்பவர் உள்பட கிராம மக்கள் மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், 'கடந்த 1979-ம் ஆண்டு மின்சார வாரியத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பிருந்தாக கூறப்பட்டு இருந்தது.

14 மின் நிலையம் அமைக்கபட்டுள்ளது

14 மின் நிலையம் அமைக்கபட்டுள்ளது

மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் கோரியும் இந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனித உரிமைகள் ஆணையத்தில் மின்சார வாரியம் சார்பில் கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க 14 மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

அரசு கண்காணிக்க வேண்டும்

அரசு கண்காணிக்க வேண்டும்

தொடர்ந்து மனித உரிமை ஆணையம் ''அரசியல் சாசணப்படி மக்களின் அடிப்படை தேவைகளான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் பொறுப்பாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடும் வகையில் வனத்துறை செயல்படுதல் கூடாது. மின்சார வசதி கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதையும் தமிழக அரசு கண்காணித்து வர வேண்டும்' என்று உத்தரவிட்டது.

English summary
Tiruppanipuram, a village near Ambasamudram in Tirunelveli district, has been without electricity for 41 years. In this situation, the Human Rights Commission has issued an order to provide electricity to the village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X