உமா மகேஸ்வரியை கொன்றது கார்த்திகேயன்தான்.. தீவிர விசாரணையில் அம்பலம்.. போலீஸ் வெளியிட்ட ரகசியம்!
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
Recommended Video
திருநெல்வேலி: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. மிகவும் துரிதமாக செயல்பட்ட தமிழக போலீஸ் அதிரடியாக ஒரே வாரத்தில் கொலையாளிகளை பிடித்துள்ளது.
திமுக கட்சியை சேர்ந்த திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இவரின் கணவர் கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் வீட்டுக்குள் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணை
இந்த நிலையில் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகனுக்கு தொடர்புள்ளது என்று போலீசார் தெரிவித்து வந்தனர். இதனால் நெல்லையை திமுக பிரமுகர் சீனியம்மாளிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினார். நேற்று இரண்டு முறை அவரிடம் விசாரணை நடந்தது. ஆனால் அப்போது போலீசாருக்கு எதுவும் துப்பு துலங்கவில்லை .

இன்று கைது
இந்த நிலையில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை இன்று போலீசார் கைது செய்தனர். கொலைக்கு அவருக்கும் தொடர்பு இருக்க 90% வாய்ப்பு இருப்பதாக கூறி போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை இன்று பிடித்தனர். அவருடன் சேர்த்து இன்னும் மூன்று பேரை இன்று நெல்லை போலீசார் கைது செய்தனர்.

உண்மை
இந்த நிலையில் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் தற்போது உறுதி செய்துள்ளனர். கார்த்திகேயனிடம் காலையில் இருந்து நடத்திய விசாரணையில், அவரின் அம்மா சொல்லி, நான் கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். அரசியல் போட்டிதான் கொலைக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

நாளை என்ன
இதில் இன்னும் இரண்டு பேருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பு தெரிவிக்கிறது. கொலைக்கு உதவியாக இருந்த இன்னும் சிலர் இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த நிலையில் கார்த்திகேயனை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்பின் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications