கொரோனாவுக்கு கிரகங்களே காரணமாம்.. 18 மாதங்கள் தரணி தட்சா யாகம் நடத்தினால் ஒழிக்கலாமாம்!
திருநெல்வேலி: உலகை அழித்து வரும் கொரோனாவுக்கு காரணமே கிரகங்களின் சேர்க்கைதான்; ஆகையால் 18 மாதங்கள் தரணி தட்சா யாகம் நடத்தினால் கொரோனாவை ஒழித்துவிடலாம் என கேரளா ஜோதிடர் சூர்யன் நம்பூதிரி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள ஸ்ரீ சூர்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடாதியான சூர்யன் நம்பூதிரி சுவாமிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மஹா ப்ரவர்ஜியா யோகம்
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்று சேர்ந்தால் அதற்கு ப்ரவர்ஜியா யோகம் என பெயர். அதிலும் வியாழனும் , சனியும் சேர்ந்திருந்தால் மஹா ப்ரவர்ஜியா யோகம். இந்த யோகம் உலகிற்கு தீங்கானது. அத்துடன் 6 மாதங்களுக்கு இடையே இரண்டு சூரிய கிரகணங்கள் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் உலக நன்மைக்கு எதிரானது. பேரழிவுகளை ஏற்படுத்தும்.

தரணி தட்சா யாகம்
இதன் விளைவாகதான் கண்ணுக்கு தெரியாத கிருமியோடு போராடுகின்றோம் .இந்த நிலையை மாற்றி உலக வாழ் மனிதர்கள் நலம் பெற தரணி தட்சா யாகம் நடத்த வேண்டும் இது சாதி, மத அடிப்படையில் இல்லை. உலகத்தில் உள்ள நோய் தொற்றால் மனிதர்கள் மடிவதை தடுக்கவும் , மனித உயிர்களை காக்கவும் நடத்தப்படுகின்றது இந்த யாகம் .

3 கட்டங்களாக யாகங்கள்
மொத்தம் 18 மாதங்கள் இந்த யாகம் நடத்த வேண்டும். இதன்படி வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி எங்கள் மடத்திலே தொடங்க உள்ளோம். அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகள், விதிமுறைகளை கடைபிடித்து யாகம் நடத்துகிறோம். முதல் 8 மாதங்கள் தொடர்ச்சியாகவும் அடுத்து அடுத்து 5 மாதங்களாகவும் யாகங்கள் நடத்தப்படும்.

அனைவரும் நடத்த வேண்டும்
இந்த தரணி ரட்சா யாகம் முழுவதும் எங்களால் தனியே நடத்த முடியாது. ஆகையால் அனைவரும் இதில் இனைய வேண்டும் . இதன் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே மத்திய , மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் எந்த பதிலும் இல்லை.இருந்த போதிலும் உலக நன்மைக்காக இந்த யாகத்தை இணைந்து நடத்தி கொடிய கிருமியை சம்காரம் செய்வோம். இவ்வாறு சூர்யன் நம்பூதிரி சுவாமிகள் கூறினார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications