ரூ.14 கோடி மோசடி...சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் புகார் - உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றச்சாட்டு
ரூ.14 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். விஜயபாஸ்கரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளா
திருநெல்வேலி: ரூ.14 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் நெல்லை டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சி. விஜயபாஸ்கரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சி.விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

முதல் தகவல் அறிக்கையில், ஏ-1 ஆக குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது மனைவி ரம்யா. இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம், 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 1988 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர், நெல்லை டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அவர் தனது புகாரில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ரூ.14 கோடி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயபாஸ்கர் ஏராளமான பணத்தை தங்கமாக மாற்றி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சி. விஜயபாஸ்கரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் என்று ஷர்மிளா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா மூலம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications