பக்ரீத் பண்டிகை! ஆட்டின் விலை ரூ 70 ஆயிரமா? அதென்ன கோங்கு ரகம்? மேலப்பாளையத்தில் கடும் போட்டி
நெல்லை: பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையத்தில் கோங்கு ரக ஆட்டை ரூ 70 ஆயிரம் கொடுத்து வாங்க கடும் போட்டி நிலவியது. அது மட்டுமல்லாமல் ஆட்டு சந்தையில் ரூ 8 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
முஸ்லீம் சகோதர, சகோதரிகள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது ஏழைகளுக்கு தங்கள் வசதிக்கேற்ப இறைச்சியை தானமாக வழங்குவர்.

இந்த பண்டிகையையொட்டி ஆடு, மாடுகளை வெட்டி, அதன் கறியை 3 பங்குகளாக பிரிப்பர், முதல் பங்கு தமது குடும்பத்தினருக்கும், 2ஆவது பங்கு உறவினர்களுக்கும், 3ஆவது பங்கு ஏழை எளியவர்களுக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.
இஸ்லாமியர்களின் வழக்கப்படி இதை குர்பானி என்பார்கள். இந்த குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்க நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் சந்தைக்கு ஏராளமானோர் கடந்த செவ்வாய்கிழமை வருகை தந்தனர். தென் மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை நடக்கும்.
இந்த சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். இந்த வகையில் இந்த பக்ரீத் பண்டிகையையொட்டியும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த மேலப்பாளையம் சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ 2 ஆயிரம் முதலும் சில ஆடுகள் ரூ 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டன. செம்மறி ஆடுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.
அது போல் அங்கு கோழிகள், கருவாடு விற்பனையும் இருந்தது. எடைக்கு ஏற்ப ஆடுகளின் விலையை வியாபாரிகள் நிர்ணயம் செய்தனர். அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ 80 ஆயிரத்திற்கு விற்பனையானது. மதுரையை சேர்ந்த கிரி என்பவரின் ஆடுகள் ரூ 60 ஆயிரம் மற்றும் ரூ 70 ஆயிரத்திற்கு விலை போனது.
மூன்றரை அடி மட்டுமே உயரம் கொண்ட கோங்கு வகை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆடுகள் ரூ 60 ஆயிரம் முதல் ரூ 70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. மேலப்பாளையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
கடையத்தில் ரூ 1 கோடிக்கு விற்பனை நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கோங்கு ஆடுகள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவை. இது தோற்றத்தில் நாட்டு ஆடுகளை விட அதிக எடை கொண்டு வளரும். ஒரு வயது கோங்கு ஆட்டின் உடல் எடை 2 வயது நாட்டு ஆட்டின் எடைக்கு சமமாக இருக்கும்.
இந்த ஆட்டின் முகம் வளைவாகவும் காதுகள் பெரியதாகவும் இருக்கும். இது தட்பவெப்பநிலையை தாங்காமல் இதன் குட்டிகள் இறக்க வாய்ப்பிருக்கிறது. இதுதான் இதில் உள்ள மைனஸ். இதை எல்லாம் தாண்டி இதை வளர்த்தோமேயானால் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆட்டுக் குட்டியின் விலை கர்நாடகாவில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் போதுதான் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களால் அதன் விலை அதிகரிக்கப்படுகிறது. நல்ல போஷாக்கான உணவளித்தால் ஒரு ஆடு 4 ஆண்டில் 100 கிலோ கூட எடை அதிகரிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications