18 பேருக்கு 7 ஆண்டு சிறை.. தப்பிய சுப உதயகுமார்.. கூடன்குளம் அணுஉலை போராட்ட வழக்கில் கோர்ட் அதிரடி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்த வர மறுத்த 2 மீனவர்களை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் விடுதலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூடன்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படக்கூடாது என திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு அணுமின் நிலைய திட்டத்தை கைவிடவில்லை. கூடன்குளத்தில் அணுமின் நிலையத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
இந்த அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் சுப உதயகுமார். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளராக இவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க மறுத்த 2 மீனவர்களை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதாக சுப உதயகுமார் உள்பட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் வழக்கில் இன்று வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில் சாட்சி மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் 19 பேர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனால் அவர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதில் ஒருவர் வழக்கு விசாரணையின்போதே காலமானதால் மற்ற 18 பேரும் 7 ஆண்டு சிறை தண்டனையை பெற்றுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் இருந்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார், புஷ்பராஜன், ஜேசுதாஸ் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் 3 பேரையும் வள்ளியூர் சார்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications