நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்.. ஜூலை 8 இல் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலி: பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோவிலும், திருநெல்வேலி அல்வாவும் தான். நெல்லையப்பர் கோவில் தோரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 8 ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையையொட்டி ஜூலை 8 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜூலை 19 ஆம் தேதி பணி நாளாக நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications