Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛திமுக தொகுதி தாரைவார்ப்பு’’.. நெல்லையில் வெல்லுமா காங்கிரஸ்! வேட்பாளர் யார் தெரியுமா? களநிலவரம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: வரும் லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டு கொடுத்துள்ளது. இதனால் திமுகவின் சிட்டிங் எம்பியான ஞானதிராவியம் ஏமாற்றமடைந்துள்ளார். இந்நிலையில் தான் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டு கொடுத்தது ஏன்? காங்கிரஸ் சார்பில் அங்கு வேட்பாளராக யார் போட்டியிடுவார்? களநிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுதொடர்பான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி திருவள்ளூர் (தனி), கடலூர், கரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election 2024 What are the election history of Nellai parliament Seat Who will contest from Congress details here

கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதியான திருச்சி மதிமுகவுக்கும், ஆரணி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை காங்கிரஸ் தோற்ற தேனி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. இந்த பழைய 3 தொகுதிகளுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கடலூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் ஞானதிரவியம் உள்ளார். இத்தகைய சூழலில் தான் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுவினர் இந்த தொகுதியை மீண்டும் கேட்டு வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி இங்கு வெல்லுமா? களநிலவரம் பற்றி பார்ப்போம்.

போட்டா போட்டி.. நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு திமுக விட்டுக்கொடுத்ததன் காரணம் என்ன? பின்னணி!


திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் மொத்தம் இதுவரை 17 தேர்தல்கள் நடந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 3 முறை, சுதந்திர கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. அதன்படி கடந்த 1952, 1957 ல் காங்கிரஸ் வேட்பாளர் பிடி தானு பிள்ளை வெற்றி பெற்றார். 1962ல் காங்கிரஸில் முத்தையா, 1967 ல் சுதந்திரா கட்சியின் சேவியர் 1971ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்ஏ முருகானந்தம், 1977 ல் அதிமுக சார்பில் ஆலடி அருணா வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 1980 ல் முதல் முறையாக திமுக வேட்பாளர் சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார். பிறகு மீண்டும் தொகுதி அதிமுக வசமானது. 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் கடம்பூர் ஆர் ஜனார்த்தனன் அதிமுக சார்பில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். 1996ல் திமுகவின் சிவப்பிரகாசம், 1998 ல் அதிமுகவின் கடம்பூர் ஆர் ஜனார்த்தனன், 199ல் அதிமுகவின் பிஎச் பாண்டியன் வென்றனர். பிறகு 2004ல் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன், 2009ல் ராமசுப்பு, 2014ல் அதிமுகவின் கேஆர்பி பிரபாகரன் வென்றனர்.

தமிழ்நாடு + புதுச்சேரி.. 10 தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா? உத்தேச பட்டியல்


கடந்த 2019 தேர்தலில் திமுகவின் ஞானதிரவியம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கிய ஞானதிரவியம் எம்பி 5 லட்சத்து 22 ஆயிரத்து 993 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிஎச் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 273 ஓட்டுகள் மட்டுமே பெற்று 1 லட்சத்து 85 ஆயிரத்து 720 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது ஞானதிரவியம் எம்பியாக உள்ள நிலையில் தான் திருநெல்வேலி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திமுக வசம் இருந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சிட்டிங் எம்பி ஞானதிரவியத்தின் மீது பல புகார்கள் எழுந்தது. குறிப்பாக தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பொறுப்பில் இருந்த ஞான திரவியம் மீது மதபோதகரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது செயல்பாட்டில் திமுக தலைமை அதிருப்தியடைந்தது.

இருப்பினும் ஞானதிரவியம் மீண்டும் களமிறங்க காய்நகர்த்தினார். இது ஒருபுறம் இருக்க சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவும் திருநெல்வேலியில் சீட் கேட்டார். இது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் உள்கட்சி பிரச்சனையை சமாளிக்க திமுக திருநெல்வேலி தொகுதியை காங்கிரசுக்கு தள்ளிவிட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் கமிஷன் தலைவராக உள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் திமுக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளதால் பீட்டர் அல்போன்ஸ்சுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர இந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வேல்துரையின் மகனும் போட்டியிட காய்நகர்த்தி வருகிறார். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவை பொறுத்தமட்டில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் களமிறங்க தயாராகி வருகின்றனர். பாஜகவில் நயினார் நாகேந்திரன் அல்லது சரத்குமார் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதுதவிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜனும் இங்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருநெல்வேலி தொகுதியில் போட்டி என்பது கடுமையாக இருக்கும் என்பதில ஐயமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+