தென்காசி அரசுப் பள்ளியில் மகளிர் உரிமை தொகை சர்ச்சை கேள்வி.. ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்கிறது
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசுப் பள்ளியில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேவதி பரிந்துரை செய்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் ஜீவா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பிப்ரவரி 13ம் தேதி வரவு வைக்கப்பட்டது. காலையிலேயே பலரது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்தது. பணம் வந்து சேர்ந்தது பின்னரே வரவு வைக்கப்பட்டது வெளி உலகிற்கு தெரியும். அவ்வளவு ரகசியமாக விஷயம் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது உரிமைத் தொகை வழங்கப்படுவதில் சிக்கல் வரக்கூடும் என்பதாலும், எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை முடக்க முயல்வதாகவும் கூறி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான 3 மாதத் தொகையையும், கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து மொத்தமாக வழங்கி உத்தரவிட்டார். அதன்படியே வழங்கப்பட்டது.1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5000 பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்காத குப்பைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது சரியா அல்லது தவறா என்று மாணவிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு 'சரி' என்று ஒரு மாணவி மட்டும் கூற, மற்ற அனைத்து மாணவிகளும் 'தவறு' என்று கூறி கைகளை உயர்த்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையாகியது. இது தொடர்பாக பல்வேறு திமுக நிர்வாகிகள் கடுமையான கேள்விகளை எழுப்பி பதிவிட்டனர். ஒரு நிர்வாகி வெளியிட்ட பதிவில், " ஏம்மா! 5,000 ரூபாயின் மதிப்பு அந்த குழந்தைக்கு தெரியுமா?
திமுக ஆதரவாளரான சுந்தரவல்லி என்பவர் வெளியிட்ட பதிவில், "தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நுழைந்து அரசின் திட்டங்களை தவறாக மாணவர்கள் மத்தியில் பேசுகிறார். இந்த மாவட்டத்தில் சங்கிகள் ஏராளமாக ஊடுருவி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இதை விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்து. நீ ஆசிரியர் என்பதால் உன்னை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அரசு திட்டங்கள் மீது தவறான முறையில் பள்ளி குழந்தைகளிடம் அரசியல் ரீதியாக அரசின் மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் இந்த அரசு பள்ளி ஆசிரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். இன்னொரு திமுக ஆதரவாளர் மகளிர் உரிமைத்தொகையை பற்றி பள்ளி குழந்தைகளிடம் ஏன் கேட்க வேண்டும்? அதை வாங்குபவர்களிடம் தானே கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மகளிர் உரிமைத்தொகையை பற்றி பள்ளி குழந்தைகளிடம் ஏன் கேட்க வேண்டும்? 😡😡
— நந்தினி ❣️ (@Nandhini1360381) February 20, 2026
அதை வாங்குபவர்களிடம் தானே கேட்க வேண்டும்#மகளிர்_உரிமைத்தொகை_5000@DforceOffl @haki21k @haraappan pic.twitter.com/fMRZj4cZEj
இதனைத் தொடர்ந்து, இத்தகைய சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு இடம் கொடுத்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேவதி, மாநில பள்ளி கல்வி இயக்குநருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications