என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கிறா.. கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற கணவன்
நெல்லை கலெக்டர் ஆபிசில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Recommended Video

நெல்லை: "என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கிறா... அதை நான் சொன்னா யாருமே காதில போட்டுக்கறது இல்லை" என்று சொல்லியவாறே ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள கிராமம் தாதனூத்து. இங்கு முருகன் என்பவர் மனைவி கவிதா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 38 வயதான முருகன், சங்கர் நகர் பேரூராட்சி கட்டண கழிவறையில் பணியாற்றி வருகிறார்.
[நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி]

உருவான கள்ளக்காதல்
ஆனால் கவிதா ராஜாவுதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்தது. இருவரின் சமாச்சாரமும் முருகனுக்கு தெரியவர, கவிதாவை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆனால் கவிதா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. பலமுறை கெஞ்சியும் பார்த்தார் முருகன். ஆனாலும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

கொலை செய்ய திட்டம்
ஒவ்வொரு முறை இந்த பேச்சு எடுத்தாலும் அது சண்டையாகத்தான் போய் முடிந்தது. அதனால் செல்வம், தாழையூத்து போலீசில் சென்று தன் மனைவிக்கு முருகனிடம் உள்ள கள்ளக்காதல் இருப்பதால் அதுகுறித்து வந்து விசாரிக்குமாறும், இருவரும் சேர்ந்து தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள் என்றும் புகார் கொடுத்தார். மேலும் தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் அந்த புகாரில் முருகன் கேட்டிருந்தார்.

செல்வத்திடம் முறையீடு
ஆனால் போலீஸ் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே தன்னை தினமும் தன்னை கண்டிக்கிறார், திட்டுகிறார், சண்டை பிடிக்கிறார் என்று கவிதா செல்வத்திடம் போய் முறையிட்டுள்ளார். முருகனிடம், வந்து கொலை மிரட்டல் விடுக்க தொடங்கி உள்ளார்.

கோரிக்கை மனு
ஒருபக்கம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை, மறுபக்கம் கொலை மிரட்டலும் வருவதால் என்ன செய்வதென்றே தெரியாத முருகன் மிகவும் பயந்துவிட்டார். அதனால் நேற்று நேராக நெல்லை கலெக்டர் ஆபீசுக்கு வந்துவிட்டார். அவர் கையில் ஒரு மனு இருந்தது. கலெக்டரை நேரில் பார்த்து தன் மனுவை தரலாம் என்று அதை வைத்திருந்தார்.

கதறி அழுத முருகன்
ஆனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த முருகன், "எத்தனையோ முறை சொல்லிட்டேன், என் பொண்டாட்டி இன்னொருத்தனுடன் சேர்ந்து என்னை கொல்ல பாக்கிறா என்று. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சொன்னால், போலீசும் கண்டுக்கலை" என்று கதறி அழுதார். பின்னர் திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். பிறகு தீ வைத்து கொள்ளவும் முயன்றார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ஓடிவந்து அவரை தடுத்தி நிறுத்தி காப்பாத்தினர். உடனே முருகனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications