பெண் சப் இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்த குடிகாரர் ஆறுமுகம்! பாத்ரூமில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் கிரேஸி இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

எஸ்ஐக்கு கத்திகுத்து

எஸ்ஐக்கு கத்திகுத்து

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம் இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குடிபோதையில் தகராறு

குடிபோதையில் தகராறு

நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி பெண் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் , சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார் இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளார் அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த சின்ன கத்தியால் மார்க்ரெட் கிரேஸியை ஆறுமுகம் குத்தியுள்ளார்.

நெல்லையில் பதற்றம்

நெல்லையில் பதற்றம்

இதையடுத்து ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே நெல்லையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டது பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கையில் மாவுக்கட்டு

கையில் மாவுக்கட்டு

காவல் உதவி பெண் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் அவரை கத்தியால் குத்திய ஆறுமுகம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் மாவுக் கட்டுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+