மூடு விழா காணும் மாஞ்சோலை ரஸ்க்! இது எப்படி பிரபலமானது தெரியுமா?
திருநெல்வேலி: இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்த மாஞ்சோலை எஸ்டேட்டின் அடையாளமாக இருந்து வந்த ரஸ்க் பேக்கரி விரைவில் மூடு விழா காண உள்ளது.
இப்போதும் 80களில் இருந்த ஒரு கிராமத்தைப் போல காட்சி தருகிறது மாஞ்சோலை எஸ்டேட். எப்போதோ வந்து போகும் ஒரே ஒரு சாலை, கூட்ட நெரிசல் இல்லாமல் அநாதையாகக் காட்சியளிக்கும் பஸ் ஸ்டாப், சின்னதாக ஒரு டீக்கடை, எந்தவித நவீன வசதியும் இல்லாத கருங்கல் கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு பழைய போஸ்ட் ஆபீஸ், கொஞ்சம் கூட நஞ்சு இல்லாமல் வீசும் தூய்மையான காற்று என இந்தக் கிராமத்தின் அழகே அப்படியே அள்ளுகிறது.

மாஞ்சோலை எஸ்டேட் என்றது பலருக்கும் 1999 நடைபெற்ற கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டம்தான் நினைவுக்கு வரும். வெறும் 70 ரூபாயாக இருந்த கூலியை 100 ரூபாயாக மாற்ற வேண்டும் என்று இந்த எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்த கூலித் தொழிலாளர்கள் போராடினர். இதே ஆண்டு ஜூலை மாதம் 23ஆ,ம் தேதி திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அந்தக் கூட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறை தடியடி நடத்தியது.
ஆற்றுப் பாலத்தின் நடுவே சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் எப்படித் தப்பிப்பது என்பது புரியாமல் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இதில் 17 பேர் உயிர் பரிதாபமாகப் பறிபோனது. இந்தப் படுகொலைக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை சிங்கப்பட்டி ஜமீனின் 32வது ஜமீன்தார் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி.) என்ற கம்பெனிக்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார். 1863களில் இந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் லிமிட்டட் தொடங்கப்பட்டது. முதலில் இந்த கம்பெனி பர்மாவிலிருந்து மரங்களைக் கொண்டுவந்து வர்த்தகம் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தது.
பின்னர் 1913 வாக்கில் தேயிலை உற்பத்தியில் இறங்கியது. இந்நிறுவனம் அதற்காகத் தொடக்கக்காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களை வாங்கியது. அதனை அடுத்து மணிமுத்தாறுக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டமான மாஞ்சோலை வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து குத்தகைக்கு வாங்கியது. 1920களில் இந்தத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கப்பட்டது.
இதற்கு 'சிங்கம்பட்டி க்ரூப் ஆஃப் எஸ்டேட்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள்தான் கூலி உயர்வு கேட்டுப் போராடினர். திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் சாம்ராஜ்யம் குத்தகை காலம் முடிந்ததால், இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
அந்த மலைப்பகுதி தொழிலாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் இன்னும் 3 மாதங்களில் முழுவதுமாக எஸ்டேட் மூடப்பட்டு உள்ளது. இது பற்றி, இங்கே மூன்று தலைமுறைகளாக வேலை பார்த்து வந்த ஒருவர் பேசியபோது, "மாஞ்சோலை எஸ்டேட் என்பது மொத்தம் 18 தேயிலை காடுகளாகப் பிரித்துள்ளது. எந்தக் காட்டில் தேயிலையில் கொழுந்து தளிர்க்கிறதோ அங்கே தோட்டத் தொழிலாளர்கள் போய் தேயிலை பறிப்பார்கள். அங்கே வேலை முடிந்ததும் அடுத்த காட்டுக்குப் போய் பறிப்பார்கள். இதுதான் இங்கே முக்கிய தொழில். கடந்த 2 மாதங்களாகத் தேயிலை பறிப்பது நின்றுவிட்டது. எனவே காடு முழுக்க புதர் போல் மாறிவிட்டது" என்கிறார்

"இங்கே உள்ள மக்களைப் போல உழைப்பாளிகளை வேறு எங்கேயும் பார்க்கவே முடியாது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்த வேலைக்குப் போனாலும் 800 ரூபாய்க்கு கீழ் சம்பள ஆள் கிடைப்பது கஷ்டம். இங்கே வெறும் 450 ரூபாய்தான் சம்பளம். இந்தக் குறைந்த கூலியை வைத்து பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறார்கள் என்றால் அது மாஞ்சோலை தொழிலாளர்களின் திறமை என்றுதான் சொல்வேன்.
1990களுக்கு முன்பு 15 ஆயிரம் பேர் இருந்தார்கள். காய்கறி கூட வெளியே வாங்க வேண்டிய தேவை இருக்காது. வீட்டுக்கு முன்பே விளைவித்து விடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆட்கள் குறைந்து போய்விட்டனர். இனி எங்களால் மலைக்குக் கீழே போனால் கூட என்ன வேலை செய்வது என்று புரியவில்லை" என்கிறார்.
மாஞ்சோலை என்றாலே ரஸ்க் பிஸ்கெட் மிகவும் பிரபலம். சென்னை வர அதன் தரத்திற்கு ஒரு பெயர் உண்டு. எஸ்டேட்டையே மூடிவிட்டார்கள். அதன்பின்னர் நாங்கள் யாருக்காக ரஸ்க் தயாரிக்கப் போகிறோம் என்கிறார் அதன் உரிமையாளர். "கடந்த 45 வருஷமாக நான் இந்த ரஸ்க் தொழிலை நடத்தி வருகிறேன். எனக்கு முன்பாக வேறு ஒரு தலைமுறை ஆட்கள் நடத்தினார்கள். ஒரு நாளைக்கு 35 கிலோ ரஸ்க் தயாரிப்போம். உடனடியாக விற்பனையாகிவிடும். மே மாதம்தான் சீசன். நிறையச் சுற்றுலாவாசிகள் வருவார்கள். எங்களால் கொடுக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். காலை 6 மணிக்கு வேலை ஆரம்பித்தால் மாலை 5 மணி வரை ஆகும்.
எங்கள் ரஸ்க் மெட்ராஸ், பாம்பே, கோயமுத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கேரளா எனப் பல இடங்களிலிருந்து ரஸ்க் வாங்குவதற்காகவே வருகிறார்கள். ஒரு கிலோ ரஸ்க் 300 ரூபாய். இந்த எஸ்டேட் மூடிவிட்டார்கள். ஆகவே இப்போது எங்கள் கடையை மலைக்குக் கீழே மாற்ற முடிவு செய்துள்ளோம்"என்கிறார் இந்தப் பெரியவர்.
இவருக்குப் பின் இவரது பேரன் கடையை நடத்தி வருகிறார். மாஞ்சோலை ரஸ்க் மூன்று மாதம் வரைகூட வைத்துச் சாப்பிடலாம். அது கெட்டே போகாது. ஏனென்றால் தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் ரஸ்க் இது. இதேபோல இங்கே தயாரிக்கப்படும் பட்டணம் பொடியும் மிகப் பிரபலம். பலர் கிலோ கணக்கில் வாங்கிப்போகிறார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications