Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அரசியல் பின்புலம்.." ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் பல சந்தேகங்கள் இருக்கு.. செல்வப்பெருந்தகை பரபர

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் கொலை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் தனியாக விசாரணை நடத்தி வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மாயமான திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் உடல் நேற்று சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Many doubts in the Jayakumar Thanasingh death says Tamilnadu Congress chief Selvaperunthagai

இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்பு ஜெயக்குமார் உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சந்தேகம்: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ஜெயக்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை: ஜெயக்குமார் தனசிங் உயிரிழப்பில் இதுவரை விசாரணை முறையாகவே நடக்கிறது. போலீசார் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த சம்பவத்தில் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்ட வேண்டும். தவறு செய்த நபருக்கு அரசியல் பின்புலம் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கை தேசிய தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றார். விரைவில் இந்த கொலை சம்பவத்தில் பல உண்மைகள் தெரிய வரும் எனத் தெரிகிறது.

என்ன சம்பவம்: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் தனசிங் (60), காங்கிரஸில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். அவருக்குக் கடந்த சில காலமாகவே கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ஆம் தேதி வெளியே சென்றுள்ளார். இருப்பினும், அவரை வீடு திரும்பவே இல்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களிலும் தேடிய போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரது மகன் கருணையா ஜப்ரின் (28) உவரி போலீசாரிடம் தந்தை மாயமானது குறித்து புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தச் சூழலில் தான் கரைச்சுத்து புதூரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்டது.

நல்லடக்கம்: இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்துள்ள திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், நேரில் சென்றும் விசாரணை நடத்தினார். அவரது உடலுக்குப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று ஜெயக்குமாரின் உடல் கரைசுத்துப்புதூரில் உள்ள ஜெயக்குமாரின் குடும்ப கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+