சாதி வெறியர்களுக்கு சம்மட்டியடி..நாங்குநேரி சின்னத்துரை ஞாபகம் இருக்கா? ப்ளஸ் 2வில் இத்தனை மார்க்கா?
நெல்லை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடன் படித்த மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குனேரி மாணவன் சின்னத்துரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் சின்னதுரை..
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள மாணவ மாணவிகள் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாதி வெறி காரணமாக உடன்படிக்கும் மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சின்னத்துரை அபார வெற்றி பெற்றுள்ளார்.
நாங்குநேரி சின்னத்துரை: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிவெறி ஊறிப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
சாதிவெறி: அதனை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் ஏன் தங்களை பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய் என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர்.
அரிவாள் வெட்டு: இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தோர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவத்தை கேட்டு சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணனும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தேர்வு: இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கைகள் வெட்டப்பட்டு தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்னத்திரை பிறர் உதவியோடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதினார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வையும் அவர் எழுதியிருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
நல்ல மதிப்பெண்கள்: தமிழ் பாடத்தில் சின்னத்துரை 71 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 93 மதிப்பெண்களும் எக்கனாமிக்சில் 42 மதிப்பெண்களும், காமர்சில் 84 மதிப்பெண்களும், அக்கவுண்டன்சியில் 85 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 94 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார் சின்னதுரை. காயம் காரணமாக படிக்க முடியாமல் போனதால் அவரது மதிப்பெண் குறைந்திருக்கிறது இல்லையேல் இன்னும் அதிக மதிப்பெண்களை சின்னத்துரை பெற்றிருப்பார் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இதனிடையே சின்னதுரையின் மேற்படிப்பை தொடர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

அமைச்சர் வாழ்த்து: இந்நிலையில் மாணவர் சின்னதுரையை தொடர்பு கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.” என கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications