மீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை
நெல்லை: புயல் மழை காலங்களில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும் என்று, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசும்போது..

புயல் மழை காலங்களில் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளம் ஒன்றை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும்.
புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் புகுந்து அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள கடற்கரை கிராமங்களாக இடிந்தகரை, கூத்தங்குழி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், காடுதுலா, தில்லைவனம்தோப்பு மற்றும் விஜயாபதி கிராமங்கள் உள்ளன.

விஜயாபதி சாலையின் குறுக்கே செல்லும் காட்டாற்று வெள்ளம் காரணமாக தனித்தீவாகி அப்பகுதி மக்களை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் விஜயாபதி அருகே காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும். ராதாபுரம் தொகுதி மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்குவது போன்று செயற்கைக்கோள் தொலைபேசி (சாட்டிலைட் போன்)வழங்கிட வேண்டும்.

கன்னங்குளத்தை ஒட்டிய பெருமாள்புரம் பகுதி ஒவ்வொரு புயல் மழை காலங்களிலும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை தடுக்க அங்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும், ஆகிய மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித்தர வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ வலியுறுத்தி பேசினார்.
புயல் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், அமைச்சரிடம் இந்த கோரிக்கைகளை இன்பதுரை வலியுறுத்தினார்.
-
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications