திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெல்லை ஸ்டேசனில் பெண் போலீஸ் செய்த காரியம் என்ன தெரியுமா? கூடங்குளமே உறைந்து போச்சு!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை கூடங்குளம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் சிலவற்றை அங்கு பணியாற்றும் பெண் காவலரே திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 பைக்குகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

பொதுவாக காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவற்றை மொத்தமாக வைத்து காவல்துறை ஒரு கட்டத்தில் ஏலம் விடும் இதுவே தமிழகத்தில் உள்ள நடைமுறை.

அதுவரை பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேசன்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அப்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன்களிலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருடு போன பைக்குகள்

திருடு போன பைக்குகள்

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார்.

திருடியது போலீஸ்

திருடியது போலீஸ்

இந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா (29), . என்பவர் தான் பாரா அலுவலில் இருக்கும்போது திருடுவது தெரியவந்தது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

பல்வேறு வழக்கில் சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட நிலையத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தை தான் நிலைய பொறுப்பு அலுவலில் இருக்கும் போதெல்லாம் இரவு நேரங்களில் தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து அவரின் உதவியோடு மூன்று இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார் கண்டுபிடிக்கப்பட்டது.

3 பைக்குகள் பறிமுதல்

3 பைக்குகள் பறிமுதல்

மேலும் காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு மொபைல் போனையும் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் திருடியுள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று இரு சக்கர வாகனங்களும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nellai Kudankulam police have arrested A female police who had stolen some of the bikes which were confiscated at the police station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X