பொருநை அருங்காட்சியகம்.. பாறையில் "ராம்" என இந்தியில் எழுதிய வடமாநிலத்தவர்.. அடுத்து நடந்த சம்பவம்!
நெல்லை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பாறையில் ராம் என்று இந்தியில் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை வைத்தே இந்தி பெயர் அழிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில் ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருநை அருங்காட்சியகத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அருள்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

பொருநை அருங்காட்சியகத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், நேற்றிரவு அலங்காரம் செய்யப்பட்டு மின்னியது. இதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரையில் கீழடி அருங்காட்சியம் அமைக்கப்பட்டதை போல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2023ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பாறை ஒன்றில் இந்தி எழுத்துக்களால் ராம் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, பொருநை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய வடமாநில ஊழியர் இந்தியில் ராம் என்று எழுதி இருப்பது தெரிய வந்துள்ளது. அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பாறையில் வடமாநில ஊழியர் எழுதியது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் வடமாநிலத்தவரை கொண்டே ராம் என்று இந்தியில் எழுதப்பட்ட எழுத்துக்களை தமிழக அரசு அதிகாரிகள் அழிக்க வைத்துள்ளனர். பெயிண்ட் அடிக்கும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். இந்த அருங்காட்சியகம் கட்டுமான பணிகளிலும் 80 சதவிகிதம் வடமாநிலத்தவரே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications