பல் பிடுங்கிய விவகாரம்.. வெயிட்டிங் லிஸ்ட் போலீசார் 3 பேருக்கு மீண்டும் பணி.. டிஎஸ்பி அதிரடி உத்தரவு
திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவலர்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிக்கு சேர்ந்தவர்தான் பல்வீர் சிங். கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த இவர், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதாவது, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட மூன்று காவல் நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சுபாஷ் எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுபாஷ் தன்னுடன் இரண்டு பேரை சேர்த்துக்கொண்டு மற்றொருவரை தாக்கியதுதான் வழக்கு. முதலில் சுபாஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாக சொல்லப்படும் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அழைத்துவரப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏஎஸ்பி பல்வீர் சிங் இவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், விசாரணையின்போது இவர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பற்களை பிடுங்கியதால் ஏகப்பட்ட ரத்தம் வெளியேறியது. எனவே உடனடியாக அவர்களை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்களிடம் கூறும்போது, வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள் என்று கூறி சிகிச்சை பெற்றுள்ளனர். இது முதல் சம்பவம். இதனையடுத்து அடுத்தடுத்த விசாரணை கைதிகளின் பற்களும் பிடுங்கப்பட்டதால் காவல்துறையினர் மீது சந்தேகம் வலுவடைந்தது.
விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாக்களில் பரவியது. பின்னர் மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில் அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றுவதாக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இத்துடன் பிரச்னை ஓய்ந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கட்சியினர் என பிரச்னை தேசிய அளவில் பேசுபொருளானது. இதனையடுத்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் பல்வீர் சிங் தைரியமான மற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரி என்று பேனரும் வைக்கப்பட்டது. இருப்பினும் பல்வீர் சிங் கட்டுப்பாட்டில் இருந்த காவல் நிலையங்களில் மனித உரிமை ஆணையம் விசாரணையை தொடங்கியது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இதுவரை சுமார் 10 பேருக்கும் அதிகமான விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் கொடுத்த பேட்டியை மறுத்து, தான் நிஜமாகவே கீழே விழுந்ததில்தான் பல் உடைந்துள்ளது என்று கூறினார்.
இருப்பினும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டது. அதில் பல்வீர் சிங் கட்டுப்பாட்டில் இருந்த 3 காவல் நிலையங்களிலும் இந்த பல் பிடுங்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் கொடூரம் என்னவெனில் குடிபோதையில் குடும்ப தகறாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நடுத்தர வயது நபரின் பற்கள் கூட பிடுங்கப்பட்டுள்ளன. வழக்கமாக கொடூரமான வழக்கில் சிக்கியவர்கள்தான் இப்படி தாக்கலுக்கு உள்ளாவார்கள்.
ஆக இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர்கள், தனிப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் துணை போயுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதாவது, அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், திருநெல்வேலி தனிப்படை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தனிப்படை காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தனக்குமார் என 6 அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஓரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இந்த காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி குற்றாலம் ஆய்வாளராகவும், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள், மணவாளகுறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும், உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி மார்த்தாண்டம் காவல் ஆய்வளராகவும் மாற்றி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications