SIR வாக்காளர்களை நீக்கும் திட்டம் அல்ல.. மூன்று முறை வீடுகளுக்கே வருவார்கள்.. நெல்லை ஆட்சியர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் என்பது, எந்த ஒரு வாக்காளரையும் நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை என்று, கூறிய மாவட்ட ஆட்சியர் சுகுமார், திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் யாரும் விண்ணப்பம் செய்யவில்லை என்று கூறினார். வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் பெரிய அளவிலான சிரமங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் நேற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சுகுமார், வாக்காளர் திருத்தப் பணிகள், அதன் தற்போதைய முன்னேற்றம் மற்றும் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்துப் பேசினார்.

SIR is not a voter suppression scheme Interview with Nellai Collector Sukumar

நீக்கும் திட்டம் இல்லை

மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தனது பேட்டியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த முக்கியத் தெளிவுரையை வழங்கினார். "வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SAR) என்பது, எந்த ஒரு வாக்காளரையும் நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், "திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் யாரும் (வாக்காளராகச் சேர) விண்ணப்பம் செய்யவில்லை" என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில்14 .18 லட்சம் வாக்காளர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வாக்காளர் திருத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த ஆட்சியர் சுகுமார், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 14 லட்சத்து 18 ஆயிரத்து 325 வாக்காளர்கள் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்டார்.
வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், இக்கூட்டத்தில் பணிகளின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மூன்று முறை வீடுகளுக்கே வருவார்கள்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் வழங்குவது மற்றும் கள ஆய்வு செய்யும் பணியில் 90 சதவீதத்தைக் கடந்து விட்டனர். வாக்காளர் திருத்தப் பணியின் தரத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சுகுமார், "ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் மூன்று முறை ஒவ்வொரு வீடுகளுக்கும் கட்டாயம் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

விண்ணப்பிக்க சிரமம் இல்லை

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து இடம் பெயர்ந்த வாக்காளர்களைத் தேடிச் செல்வதற்கு முதலில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆயினும், வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் பெரிய அளவிலான சிரமங்கள் எதுவும் இல்லை. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளப் போதுமான அளவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+