பீகாரில் பாஜக வெற்றிக்கு முழு காரணமாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துகள்- அப்பாவு அட்டாக்
நெல்லை: பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு முழு காரணமாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துகள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2ஆவது முறையாக ஸ்டாலின் முதல்வராக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், பணகுடியில் சைக்கிள் வழங்கும் விழாவில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு முழு காரணமாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துகள்.

தமிழக சட்டசபை சபாநாயகர் என்ற முறையில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் பீகார் போன்று நடக்க வாய்ப்பில்லை. 2-ஆவது முறையாக வரும் 2026-ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலிலும் ஸ்டாலின் முதல்வராவார் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அது போல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இந்த தேர்தலில் 243 தொகுதிகளுக்கு 2616 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களிலும் மகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 143 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பிறகு வாக்குச் சாவடி இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற 122 இடங்கள் பெரும்பான்மை பலம் பெற வேண்டும். இந்த நிலையில் ஜேடியூ+ பாஜக கூட்டணி 201 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 91 தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி அண்மைக்காலமாக நிறைய தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
அது போல் நெல்லையில் 14ஆவது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர்பான ஒரு விழாவில் கலந்து கொண்ட அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய நிதியமைச்சர் 13 முறை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே 13 முறை நடந்ததற்கும் தற்போது நடக்கும் வாக்காளர் திருத்தத்துக்கும் வித்தியாசம் உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. உச்ச நீதிமன்ற நீதியரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையர்களால் அப்போது சிறப்பு திருத்தம் நடந்தது.
இப்போது இருப்பவர் ஆணையர் அல்ல. பிரதமர் சொல்லும் ஆணையை ஏற்று நடத்தும் நிறுவனமாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. ஆகவே அதனை எதிர்க்கிறோம். பீகாரில் தேர்தலுக்கு முன் ரூ.10 ஆயிரம் அரசு நிதி பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. இதற்கு முன் திருத்தம் செய்தபோது இறந்த வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் வாக்காளர்களில் இருக்கும் குளறுபடிகள் சரி செய்யப்பட்டது.
ஆனால் இப்போது வாக்காளர்களே இல்லாமல் ஆக்கி, புதியதாக சேர்க்கும் நிலை 12 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதை தமிழக அரசு தடுப்பதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சர்வசிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதி அவரது காலத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மத்திய அரசின் எந்த திட்டத்துக்கும் தடையாக இல்லை. தேர்தல் ஆணையம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்தாலும், படிவம் 17 சி-ஐ உடனடியாக இணைய தளத்தில் ஏற்ற மறுக்கிறது.
தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. டெல்லியில்தான் அமைதியின்மை உள்ளது. குளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதை மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழக பாஜகவை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழக திட்டங்களுக்கு நிதி கொடுக்காத மத்திய பாஜக அரசை தான் எதிர்க்கிறோம்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் எங்களுக்கு இல்லை என நாங்கள் சொல்ல மாட்டோம். அப்படி சொல்பவர்கள் நாங்களும் அல்ல. எந்தச் சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். 2.0 முதல்வராக மீண்டும் ஸ்டாலின் வருவார். தேர்தல் ஆணையத்தின் சதியை முறியடிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications