பரிதவிக்கும் விவசாயிகள்.. தொடர் மழையால் நெற்பயிர் சேதம்.. நிவாரணம் வழங்க சபாநாயகர் அப்பாவு கோரிக்கை!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சபாநாயகர் மு.அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏராளமான விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கும்பிகுளம், கருங்குளத்தில் பெய்த கனமழை காரணமாக சேதமான நெற்பயிர்களை ஆய்வு செய்தார். பின்னர் இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்ட கால பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக நெல் மணிகள் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால் நெற்பயிர்களை வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. பணகுடிக்கு அருகில் உள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம், பாசனப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதேபோல், ராதாபுரம் தாலுகா கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழையால், நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
எனவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெல் மணிகளி்ன் சேதத்தை ஆய்வு செய்து, இதனை பேரிடராகக் கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழமையான நிவாரணம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications