Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒத்த கையில் அரசு பஸ்ஸை ஓட்டிய திருநெல்வேலி டிரைவர்! 10 நிமிஷத்துக்கு ஸ்டியரிங்கை விடல! மிரண்ட நெல்லை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் டிரைவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பஸ்ஸை இயக்கியிருக்கிறார்.. இந்த நிகழ்வு அனைத்தையும், அந்த பஸ்ஸில் இருந்த ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிரவும் அதில் தற்போது வெளியாகி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது,. இதுகுறித்த உடனடி நடவடிக்கை வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.

எப்போதுமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நம்முடைய தமிழக போக்குவரத்து துறை மிகுந்த கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறது..

Tirunelveli Nellai government bus

இதற்காகவே சிரத்தையுடன் பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் பிறப்பித்து வருகிறது. பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும், போக்குவரத்து துறை அடிக்கடி அட்வைஸ்களையும் வழங்கி வருகிறது.

ஆனால், ஒருசில டிரைவர்கள் இதனை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.. ஒரு கையில் செல்போனில் பேசிக்கொண்டே மறு கையில் பஸ்சை ஓட்டுவதுமாக இருக்கிறார்கள்.. இப்படி டிரைவர்கள் யாராவது பொறுப்பற்ற முறையில் பஸ் ஓட்டுவது தெரிந்தால், பஸ்ஸிலுள்ள பயணிகளே இதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுகிறார்கள்.

சஸ்பெண்ட் நடவடிக்கை

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதுமே, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுகிறது..

சிலசமயம் சில டிரைவர்கள் குடிபோதையில் இயக்கும் கொடுமையும் நடக்கிறது.. சம்பந்தப்பட்ட டிரைவர்களை பரிசோதனைக்காக அழைத்து சென்று, பரிசோதனை செய்து, அவர்கள் குடிபோதையில் இருப்பதும் பலமுறை உறுதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் பணியிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்கள்.. எனினும் இதைப்பற்றி சில டிரைவர்கள் கவலைப்படுவதுகூட கிடையாது.

அரசு பஸ்கள் டிரைவர்கள்

இத்தனைக்கும் அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று போக்குவரத்துத்துறை பலமுறை எச்சரித்து, செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது. எனினும் சில டிரைவர்களின் அலட்சியம் நீடித்தபடியே உள்ளது. இதோ நெல்லையில் ஒரு கொடுமை நேற்று நடந்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து நேற்று ராமேஸ்வரம் சென்ற (TN72 N 2470) என்ற பதிவுஎண் கொண்ட அரசு பஸ் 40 பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது டிரைவருக்கு ஒரு போன் வந்தது.

10 நிமிடத்துக்கு விடாத டிரைவர்

அந்த போனை அட்டெண்ட் செய்த டிரைவர், ஒரு கையில் ஸ்டியரிங், இன்னொரு கையில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்.. எப்போது போனை கீழே வைப்பார் என்று பயணிகளும் பதைபதைப்படன் பார்த்து கொண்டேயிருந்தனர்.. ஆனால், சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக டிரைவர் ஒரே கையில் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு பேசி கொண்டிருந்தார்..

இப்படி கவனக்குறைவாக பஸ்ஸை ஓட்டுவதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.. உடனே அதே பஸ்ஸில் சென்ற பயணி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் இதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்துவிட்டார்..

சாலை விபத்து உயிரிழப்புகள்

அந்த வீடியோவில், டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே சாலையை சரிவர கவனிக்காமல் பஸ்ஸை ஓட்டுவது தெளிவாக பதிவாகியிருக்கிறது.. அதிவேகமாக சென்று கொண்டிருந்த பஸ்சில் இடம்பெற்ற இந்த அலட்சியமான செயல் பயணிகளிடையே பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே தமிழகம் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் நாடு முழுவதும் முன்னிலையில் உள்ளது. இதில், அரசு பஸ் டிரைவரின் பொறுப்பற்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பயணிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+