திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 இன்ச் அளவிற்கு துளை.. ரூ.25 கோடி சொத்துக்காக நடந்த கொலையா? உமா மகேஸ்வரி கொலையில் துப்பு!

திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரின் கொலை பெரும்பாலும் சொத்துக்காக நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக மேயர் உமா படுகொலை! அதிர வைக்கும் நெல்லை

    திருநெல்வேலி: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரின் கொலை பெரும்பாலும் சொத்துக்காக நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    திமுக கட்சியை சேர்ந்த திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இவரின் கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் வீட்டுக்குள் வைத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலையை செய்தது யார் என்று தெரியாமல் போலீசார் குழம்பி வருகிறார்கள். கொலைக்கு என்ன காரணம் இருக்கலாம் என்பது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    கிடையாது

    கிடையாது

    முதலில் அரசியல் பகை என்ற கோணத்தில் இந்த கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியாக உமா மகேஸ்வரிக்கு பெரிய பகை இல்லை என்று நிரூபணம் ஆனது. அதை தொடர்ந்து ஜாதி ரீதியான கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டதால், அது தொடர்பான விசாரணை நடந்தது.

    கொலை மூர்க்கம்

    கொலை மூர்க்கம்

    ஆனால் ஜாதி ரீதியாகவும் உமா மகேஸ்வரிக்கு பெரிய அளவில் பகை எதுவும் இல்லை. மாற்று கட்சியினர், மாற்று ஜாதியினர் ஆகியோரிடமும் உமா மகேஸ்வரி நன்றாக பழக கூடியவர்தான். அதனால் அவருக்கு அது தொடர்பாக பகை ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இதனால் போலீசார் வேறு விதமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிக்கல்

    சிக்கல்

    உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரின் கொலை பெரும்பாலும் சொத்துக்காக நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உமா மகேஸ்வரிக்கு மொத்தம் 30+ கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. இதில் 25 கோடி ரூபாய் சொத்து கொஞ்சம் வில்லங்கம் கொண்டது என்றும் துப்பு கிடைத்துள்ளது. இதற்கு அவரின் குடும்பத்தை சேர்ந்த சிலர் ஆசைப்படுவதாக போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.

    பெரிய குடும்பம்

    பெரிய குடும்பம்

    அவரின் மரணத்திற்கு பின் இந்த சொத்து குடும்பத்தில் வேறு சிலருக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் ஒருவேளை இந்த கொலையை சொத்துக்கு ஆசைப்பட்டு செய்து இருக்கலாம் என்கிறார்கள். உமா மகேஸ்வரிக்கு குடும்பத்தில் சிலருடம் மனஸ்தாபம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    எததனை பேர்

    எததனை பேர்

    இந்தக் கொலை தொடர்பாக, உறவினர்கள் உள்பட 70 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதில் உமா மகேஸ்வரியின் உறவினர்கள் 7 பேர் குறி வைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 7 பேர் மீது போலீசுக்கு அதிக சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    அதே சமயம் இந்த கொலை மிகவும் கொடூரமாக நடந்துள்ளது. உமா மகேஸ்வரியின் கழுத்தில் மட்டும் திருப்புளி போன்ற சாதனத்தை வைத்து கொன்று உள்ளனர். கழுத்தில் 4 இன்ச் ஆழத்திற்கு துளை உள்ளது. அதனால் இவ்வளவு கொடூரமான கொலை உறவினர்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    English summary
    Tirunelveli Ex-Mayor Uma Maheshwari and two other murders maybe for money and property.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X