நெல்லை மீனாட்சிபுரத்தில் மூக்கை நுழைத்த மாமியார்.. தடுமாறிய காதல் தம்பதி.. கிச்சனுக்கு ஓடிய மருமகன்
நெல்லை: உயிருக்கு உயிராக காதலித்த ஜோடி, பெற்றோர்களின் அதிருப்தியையும் மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.. பெற்றோர்கள் இவர்களை மனப்பூர்வமாக ஏற்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி திருமணத்தை நடத்தி வைத்தனர்.. நெல்லை மீனாட்சிபுரத்தில் இனிமையான வாழ்க்கையையும் தம்பதி இருவரும் தொடங்கினார்கள்.. ஆனால் 2 மாதத்திலேயே பிரச்சனை வெடித்துவிட்டது.. இப்போது அந்த குடும்பமே கதிகலங்கி போயிருக்கிறது. என்ன நடந்தது மீனாட்சிபுரத்தில்?
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ளது என்ற ஆலடிப்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் 20 வயது பிரித்திகா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெயிண்டர் அன்புராஜ் என்பவரை காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.. எனினும் பிள்ளைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்படியே கடந்த 2023 டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
மீனாட்சிபுரத்தில் தம்பதி
திருமணத்திற்குப் பிறகு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் தம்பதி இருவரும் வாழ்க்கையை துவங்கினர்.. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. இதனால் தினமும், சண்டையும், தகராறும் ஏற்பட்டு வந்தது..
ஒருகட்டத்தில் பிரச்சனைகள் அதிகமானதால், கடந்த 2024 ஜனவரியில் அதாவது திருமணமாகி 2 மாதத்திலேயே இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ துவங்கினர்.. இதனால் கவலையடைந்த உறவினர்கள், தம்பதி இருவருக்கும் புத்திமதிகளை சொல்லி, மே மாதம் முதல் அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ந்து வாழச்செய்தனர்.
மருமகன் விவகாரத்தில் தலையிட்ட மாமியார்
இதனிடையே, பிரித்திகாவின் அப்பா இறப்புக்கு பிறகு, குறிப்பிட்ட அளவு பணம் பிரித்திகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை செலவு செய்தது தொடர்பாக தம்பதிக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து பிரித்திகா தன்னுடைய அம்மா, சகோதரனிடம் போனில் பேசி புலம்பி வந்துள்ளார்.
ஆனால், இப்படி அடிக்கடி செல்போனில் பேசி, தன்னை பற்றி புகார் சொல்வது அன்புராஜிக்கு பிடிக்கவில்லை. எனவே, உன்னுடைய குடும்பத்தில் பேசுவதால்தான், நமக்குள் நிறைய பிரச்சினை வருகிறது, அதனால் அவர்களுடன் பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
நேற்றுமுன்தினம் அன்புராஜ் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்.. அப்போது பிரித்திகா தன்னுடைய அம்மாவிடம் போனில் பேசுவதை கண்டு மீண்டும் கொந்தளித்துள்ளார்.. எதுக்காக உன்னுடைய அம்மாவிடம் பேசினாய்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
காய்கறி நறுக்கும் கத்தி
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தின் உச்சிக்கே போன அன்புராஜ், மனைவி பிரித்திகாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துவிட்டார்.. அப்போதும் ஆவேசம் அடங்காமல் கிச்சனுக்கு சென்று, கத்தியால் கழுத்தை அறுத்து மனைவியை கொடூரமாக கொன்றார்.
பிறகு உடனே வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, அங்கிருந்து கோவில்பட்டிக்கு தப்பி சென்றுவிட்டார். எனினும், கொலை செய்துவிட்டதால் என்னாகுமோ என்று பயந்துபோன அன்புராஜ், தன்னுடைய தம்பிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பி, உடனடியாக தனது அப்பாவிடம் தகவலை கூறியுள்ளார்.
பரபர வாக்குமூலம்
இதையடுத்து, அவரது அப்பா, அன்புராஜூக்கு போன் செய்து அட்வைஸ் தந்து, உடனே கிளம்பி வந்து போலீஸில் சரணடையும்படி அட்வைஸ் தந்துள்ளார்.. அதன்படியே அன்புராஜ், நெல்லை சந்திப்பு ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார்.
பின்னர் அன்புராஜ் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை திறந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரித்திகாவின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சரணடைந்த அன்புராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications