Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைந்த தண்டவாளம்.. திருச்செந்தூருக்கு ரயில் ரத்து.. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையில் இருந்து இயக்கம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் சேவை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 7வது நாளாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி திடீரென மழை தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

Tirunelveli-Tiruchendur train service canceled today for the second day

மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்கு புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

ரயில் போக்குவரத்தை பொறுத்த அளவில் டிச.17ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயில் பாதையில் முழுவதும் மழை தேங்கியது. குறிப்பாக தாதன்குளத்தில் ரயில் தண்டவாளத்தின் கீழே இருந்த ஜல்லி கற்கள், மண் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.

இந்த ரயிலில் சிக்கியிருந்த 500க்கும் அதிகமானோர் 2 நாட்களுக்கு பின்னர்தான் மீட்கப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள், அங்கிருந்து தூத்துக்குடி வரும் ரயில்கள் அனைத்தும் கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முதல் தூத்துக்குடி-சென்னை வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை வழக்கம்போல தொடங்கியது. ஆனால் திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் பாதை இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. எனவே இரண்டாவது நாளாக இந்த வழித்தடத்தில் இன்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பலத்த மழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்த செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையேயான ரயில்வே இருப்புப் பாதையைச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், திருநெல்வேலி - திருச்செந்தூர் தடத்தில் அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும், தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயிலும் (06667) இன்று ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல, வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூர் தடத்தில் ரயில் சேவை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருச்செந்தூரில் சென்னை எழும்பூருக்கு புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.20606) திருச்செந்தூர்- நெல்லை இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, இரவு 9.35 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16732) மதியம் 1.30 மணியளவில் நெல்லையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு சென்றடையும்.மறுமார்க்கமாக, பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16731) திருநெல்வேலி வரையில் மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+