முத்தலாக் மசோதாவை ஆதரிப்பதா.. அதிமுகவுக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
கடையநல்லூர்: முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடையநல்லூரில் சேணைத் தலைவர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கன்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது .
(1) நாட்டை பின்னோக்கித் தள்ளும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். கல்வித்துறையில் சாதனை படைத்து வரும் தமிழக மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் கரும்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திணிப்பு அமைந்துள்ளது.
ஆனால் தற்போதைய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழக மாணவர்களின் கல்விக் கனவைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் மாணவர்களை கல்வியை விட்டு தூரப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

3 ஆம் வகுப்பு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைத்து தேர்ச்சி பெற வேண்டும் என்று சொல்லப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தோல்வியைத் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ சமுதாயத்தை உருவாக்கும் வேலையையும் இந்த புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து விடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழியை பாடதிட்டத்தின் மூலம் திணிப்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும் என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால் அது மாணவ மாணவிகளை கல்வியை விட்டு தூரமாக்கி மனு தர்மம் சொல்லித்தரும் குலத்தொழிலை நோக்கி மாணவர்களைத் தள்ளிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே மத்திய அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த ஒரு காரியத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பின்நோக்கித் தள்ளிவிடும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
(2) முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை மீறி முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் பாஜகவின் மோடி அரசு நிறைவேறியது. முத்தாலக் பழக்கத்தை மேற்கொள்ளும் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வழி செய்யும் இந்த மசோதா. மக்களவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது இதில் கடந்த முறை எதிர்த்தும் இந்தமுறை ஆதரித்து வாக்களித்த அதிமுக தேனி மக்களவை உறுப்பினர் ரவிந்தர்நாத்திற்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
(3) தேசிய விசாரணையின் முகமையான தேசிய புலனாய்வு சட்ட திருத்தம் 2019-க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்கிறது
இதற்கு முன்பு மத்திய அரசுகளால் கொண்டு வரப்பட்ட தடா,பொடா போன்ற கருப்பு சட்டங்களால் பாதிக்கப்பட்டது இந்நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள்தான். கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் அந்த சட்டங்கள் வாபஸ் பெறப் பட்டன. இப்பொது UAPA, NIA வால் பாதிக்கப்படுவதும் முஸ்லிம்கள்தான் இது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும் இதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாக எதிர்கிறது
(4) நெல்லை- தாம்பரம் வாராந்திர ரயில் அம்பை வழியாக இயக்கப்படும் நிலையில் கடையநல்லூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தாம்பரம்-நெல்லை இடையே வாராந்திர ரயில் கடையம், அம்பை கடையநல்லூர் வழியாக இயக்கப்படுகிறது சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாவூர்சத்திரம், தென்காசி, பாம்புக்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை சென்றடையும்.
இந்த ரயில் கல்லிடைக்குறிச்சியில் ஒரு தண்டவாளம் உள்ள பகுதியில் இந்த ரயில் நிறுத்தப்படுகிறது. ஆனால் கடையம், கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் இரண்டு தண்டவாளங்கள் இருந்த போதிலும் இந்த ரயில் நிறுத்தம் இல்லாதது பயணிகளை வேதனையடைய செய்துள்ளது. எனவே இந்த நிறுத்தங்களில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்
(5) கடையநல்லூர் நகராட்சி குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கப்படும் விதத்தில் இறந்தவரின் உடலை மின் எரிமேடை மூலம் தகனம் செய்ய மின்எரியூட்டல் மேடை அமைக்க நகராட்சி நிர்வாகம் அனைத்து சமுதாய மக்களை அழைத்து பேசி உடனே மின் தகன மேடை அமைக்கவேண்டும். உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications