கோவிலை நிர்வகிப்பதில் மோதல் - கண் இமைப்பதற்குள் வியாபாரியை வெட்டிய மர்ம நபர்.. நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி: காய்கறிகளை சொந்த வாகனத்தில் சந்தைப்படுத்த வந்த வியாபாரியை மர்ம நபர் வெட்டிப் படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள சுப்பையா புரத்தைச் சேர்ந்தவர்
சசிகுமார் (40). இவர் தான் வைத்திருக்கும் லோடு ஆட்டோவில் தனக்கு சொந்தமான காய், கனி சரக்குகள் மற்றும் பிற விவசாயிகளிடம் பெற்ற காய்கனிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி டவுனில் செயல்பட்டுவரும் நைனார் குளம் காய்கறி சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் சசிகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில் சசிகுமாரின் சொந்த ஊரான சுப்பையா புறத்தில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றை நிர்வகிப்பதில் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இதனால் எதிர்தரப்புக்கும் சசிகுமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28 தேதி மானூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே சசிகுமார் வெட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications