கீழே விழுந்துதான் பல் உடைந்தது..லாக்கப்பில் பற்களை உடைக்கவில்லை- அந்தர் பல்டி அடித்த கைதிகள்!
திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் தாக்கி தமக்கு பற்கள் உடையவில்லை; கீழே விழுந்துதான் பற்கள் உடைந்தன என விசாரணை கைதிகள் அந்தர் பல்டி அடித்திருப்பது பரப்ரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்கி விசாரிக்கப்பட்ட பலரும் பற்களை பறிகொடுத்திருக்கின்றனர். அதாவது விசாரணையின் போது கட்டிங் பிளேயர் உள்ளிட்டவை மூலம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்குவது, உடைப்பது என்பதை ஸ்டைலாக வைத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.

இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. ஏஎஸ்பி பல்வீர்சிங் தாக்கி பற்களை இழந்தவர்கள் நாங்கள் என வெளியான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்தை சட்டசபையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சார்-ஆட்சியர் / உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன் என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் சபீர் முகமது ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்கு கைதிகளாக இருந்து சித்ரவதையை அனுபவித்தவர்களும் வந்திருந்தனர். இவ்விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா என்பவர், கீழே விழுந்துதான் பல் உடைந்தது; போலீசார் தாக்கி பற்கள் உடையவில்லை என அந்தர் பல்டி அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூர்யாதான், ஏஎஸ்பி பல்வீர்சிங் தாக்கியே பல் உடைந்தது என போட்டோ ஆதாரத்துடன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications