"ஏலே ஏம்ல்ல இப்படி பண்றீங்க?.. திருமண வரனை இனி தடுத்தால் அவ்வளவுதான்! நெல்லையை அலறவிடும் போஸ்டர்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வரன் பார்க்க வருவோரிடம் தவறான தகவல்களை கூறி திருமணத்தை தடுத்து வருவோருக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருமணம்.. தாய், தந்தை அரவணைப்பில் வாழ்ந்த ஆணும், பெண்ணும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதன் தொடக்க புள்ளி. திருமணம் என்ற பேச்சு தொடங்கியதுமே சில இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உடனடியாக மணப்பெண், மணமகன் கிடைத்துவிடும்.

tirunelveli nellai

ஆனால் இன்னொரு தரப்பினருக்கு திருமணம் என்பது பல சவால்கள் நிறைந்ததாக உள்ளது. அதாவது பல இடங்களில் மணப்பெண், மணமகன் தேடியும் கிடைப்பது இல்லை. சிலர் பல ஆண்டுகளாக தங்களின் திருமணத்துக்கான மணப்பெண், மணமகனை தேடி வரும் சூழலும் உள்ளது. இதற்கு படிப்பு, பொருளாதார சூழல் உள்பட பல காரணங்களை கூறலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு காரணம் ஒன்றும் உள்ளது. அதாவது நாம் பல திரைப்படங்களில் ஒன்றை பார்த்து இருப்போம். வரன் தேடி வரும் நபர்களிடம் குறிப்பிட்ட இளைஞர், இளம்பெண் பற்றியும், அவர்களின் குடும்பத்தை பற்றியும் தவறாக கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துவதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற காட்சிகள் பல திரைப்படங்களில் உள்ளது.

திரைப்படங்களில் தான் இப்படி என்றால் நேரிலும் கூட பல இடங்களில் நிலைமை அவ்வாறே உள்ளது. அதாவது திருமண வயது நிரம்பியவர்களை தேடி மணமகன், மணப்பெண்ணின் வீட்டார் வரன் கேட்டு வரும்போது உள்ளூர்காரர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் குறிப்பிட்ட அந்த இளைஞர், இளம்பெண்கள் பற்றி தவறாக கூறி வரனை கலைத்து விடுவது ஆங்காங்கே நடந்து வருகிறது. இதில் பல சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட பகையால் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர், இளம்பெண்களுக்கு கல்யாணம் என்பதை நடக்க விடாமல் செய்கின்றனர்.

இதனால் பலருக்கும் திருமணம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. இத்தகைய சூழலில் தான் திருமண வரன்களை தடை செய்வர்களை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் என்பது திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஊர் என்பது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரூட்டில் அமைந்துள்ளது. தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது:

‛‛வன்மையாக கண்டிக்கிறோம்!!
பொன்னாக்குடி
ஊரில் திருமணவன்களை தடை செய்பவர்களை!!
நீ எத்தனை வருசம் நல்லா வாழ்ந்துருவ?
உன் பிள்ளைக்கு இந்த மாதிரி வந்தா?
கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறியே?
புறம்பேசி தடுக்க நினைக்கிறியே?
ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறியே நல்லா இருப்பியா நீ
குறிப்பு
சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரின் சாரம்சம் இதுதான். ஆனால் அந்த போஸ்டரில் சில இடங்களில் வட்டார வழக்கில் பேசுவது போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+