நெல்லையில் கல்லூரி மாணவி ராமலட்சுமி.. படுக்கை அறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன பெற்றோர்
திருநெல்வேலி: திருநெல்வேலி பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா என்பவரது மகள் ராமலட்சுமி என்பவர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகளை தர்மராஜா கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி, தவறான முடிவெடுத்துள்ளார். அவர் எடுத்த முடிவு பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைய ஜென் தலைமுறை கிட்ஸ்களில் பலர், செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை.. அக்கம் பக்கம் யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதை கூட பார்ப்பது இல்லை. பெற்றோர்களின் பேச்சை மதிப்பது இல்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் கவனிப்பது இல்லை.. ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதும் இல்லை. சின்ன சின்ன ஏமாற்றங்களை கூட சந்திக்காமல் வளர்க்கிறார்கள்.

சிறுவயது முதலே அதிக செல்லம் கொடுத்து குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் எதற்கு எடுத்தாலும் அடம்பிடிப்பது நடக்கிறது. அதேபோல் சிறுசிறு சிக்கல் வந்தாலும் முடங்கிவிடுகிறார்கள். சின்ன சின்ன ஏமாற்றங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் பக்குவம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். தலைமுடியை ஒழுங்காக வெட்டு, நன்றாக படி, நீ நல்ல மார்க் எடுக்கவில்லை என்று கூறுவதை கூட அவமானமாக நினைக்கிறார்கள். பெற்றோர்கள் செல்போன் பார்க்காதே என்று திட்டுவதைகூட மனரீதியாக ஏற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இறுதியாக தவறான முடிவெடுக்கிறார்கள். திருநெல்வேலியில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது
திருநெல்வேலி பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்த 44 வயதாகும் தர்மராஜா பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமிக்கு 18 வயது ஆகியிருந்தது. இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ராமலட்சுமி சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாகவும், இதை அவரது தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனை, தர்மராஜா வாங்கிக்கொண்டு மகளுக்கு அறிவுரை கூறினாராம். இதனால் ராமலட்சுமி விரக்தியில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவில் ராமலட்சுமி தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.. அங்கு அவர் திடீரென்று சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார். நேற்று காலையில் அவரது அறை கதவு திறக்காததால் பெற்றோர் சத்தம் கொடுத்தனர். ஆனால் பதில் எதுவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.
அங்கு ராமலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்து, கதவை உடைத்து அறைக்கு சென்றனர். அங்கு ராமலட்சுமியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராமலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications