36 மணி நேரம்! இடியை போன்ற பெரும் சத்தம்.. நெல்லை குவாரியில் 300 அடி ஆழத்தில் நடந்தது என்ன? - பின்னணி
திருநெல்வேலி: நெல்லையில் குவாரி விபத்து ஏற்பட காரணம் என்ன? இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
நெல்லையில் ஏற்பட்ட குவாரி விபத்து தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. 36 மணி நேரமாக மீட்பு பணிகள் செய்தும் உள்ளே சிக்கி இருக்கும் 3 பேரை இன்னும் மீட்க முடியவில்லை.
உள்ளே சிக்கி இருக்கும் 3 பேர் உயிருடன் இருப்பதே சந்தேகம்தான் என்று தீயணைப்பு துறையும் நம்பிக்கையின்றி தெரிவிக்க தொடங்கி உள்ளது. இது போக இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரும் மீட்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை என்று கையை விரித்துவிட்டது.

எப்படி ஏற்பட்டது?
சரி இந்த விபத்து எப்படி ஏற்பட்டது.. விபத்து ஏற்பட என்ன காரணம் என்று பார்க்கலாம். நேற்று முதல்நாள் இரவு திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள அந்த தனியார் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டது. இது கிரானைட், பாறைகள் எடுக்கும் கல் குவாரி ஆகும். பொதுவாக கல் குவாரிக்கு கீழே செல்ல முறையாக பாறைகள் இருக்கும். ஆனால் இந்த குவாரியில் பாதையே மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

லாரி
கீழே பாறைகளை எடுத்துக்கொண்டு மேலே வர இரண்டு லாரிகள் நேற்று முதல்நாள் இரவு நிறுத்தப்பட்டது. பாறைகளை எடுக்க லாரி தயாராக இருந்ததால், லாரியை சுவற்றுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளனர். லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோர் உள்ளே இருந்துள்ளனர். கிளீனர் வெளியே லாரிக்கு அருகில் நின்று இருந்தார். கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் அருகிலேயே இருந்துள்ளனர்.

சிக்கல்
இந்த குவாரி 300 அடி ஆழம் கொண்டது. அதாவது கிட்டத்தட்ட குமரி திருவள்ளுவர் சிலை உயரத்தின் இரண்டரை மடங்கு ஆழம் கொண்டது இது. ஆனால் இங்கு அனுமதிக்கப்பட்ட அளவு என்னவோ வெறும் 90 அடிதான். ஆனால் பேராசை காரணமாக மேலும் பல அடிகள் தோண்டி தோண்டி 300 அடி வரை கொண்டு சென்றுள்ளனர். இதனால் பக்கவாட்டு சுவர்களின் வலிமை மொத்தமாக குறைந்துள்ளது. பக்கவாட்டு சுவரின் பாறைகள் அடிக்கடி உதிர்ந்து விழுந்துள்ளன.

மழை
இந்த நிலையில்தான் அங்கு மழை காரணமாக நேற்று முதல்நாள் திடீரென 5-6 பெரிய பாறைகள் ஒரே நேரத்தில் விழுந்துள்ளன. கண் இமைக்கும் நொடியில் இடி இடிப்பது போன்ற பெரும் சத்தத்தோடு பாறைகள் விழுந்துள்ளன. கண் இமைக்கும் நேரத்தில் பாறைகள் விழுந்ததில் கீழே இருந்த லாரி, கிட்டாச்சி எல்லாம் உள்ளேயே சிக்கியது. நேரடியாக இதன் மீது பல பாறைகள் அப்படியே விழுந்து இருக்கின்றன. இதுதான் விபத்திற்கு காரணம்.

என்ன நடக்கிறது
அதன்பின் நடந்த மீட்பு பணிகள் சுருக்கமாக பின்வருமாறு
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
4க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அதேபோல் ராட்சச கிரேன்கள் கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர்
அதன்பின் தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு வந்தது.
அதோடு ஐஎன்எஸ் கப்பலில் இருந்து ராமநாதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் அவசரமாக வந்தது.
ஆனால் இவர்களால் கயிறு கட்டி மீட்க முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பி சென்றது.
இதன்பின் செல்வம் என்றவர் மீட்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.
நேற்று இரவு மழையால் பாறைகள் மீண்டும் விழ மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, தற்போது காலை மீண்டும் பணிகள் தொடங்கி உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications