திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விக்கெட்" விழுந்தாச்சு?.. பேரம் நடக்குதாமே.. உளவுத்துறையே சொல்லிடுச்சாம்.. போட்டுடைத்த இந்து முன்னணி

திருமாவளவன் பதவியை ராஜினாமா செய்ய காடேஸ்வர சுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

நெல்லை: "மகாராஷ்டிரா போல தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை.. இந்து பெண்களை அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இந்த பயணத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்து உரிமை மீட்பு பிரச்சாரக் கூட்டம் நடந்து முடிந்தது.

தமிழகத்திலும் 'மகாராஷ்டிரா' ஆபரேஷன்! திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் - இந்து முன்னணி காடேஸ்வரா பகீர் தமிழகத்திலும் 'மகாராஷ்டிரா' ஆபரேஷன்! திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் - இந்து முன்னணி காடேஸ்வரா பகீர்

பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த கூட்டத்தில் காடேஸ்வர சி.சுப்பிரமணியன் பேசும்போது, "தமிழகத்தில் இந்துக்களின் உரிமை என்பது மீட்கப்பட வேண்டும்.. அதை மீட்க ஜுன் 28 திருந்செந்துாரில் பிரசாரப்பயணம் துவங்கி ஜூலை 31ல் சென்னையில் நிறைவடையும். 500 வருடங்கள் பழமையான கோயில்கள் இடிக்கப்படுகின்றன... இந்துக்களின் உரிமைகளை தமிழக அரசு வழங்கவில்லை... இந்த அரசு நான்காண்டு நீடிக்குமா மூன்றாண்டு நீடிக்குமா என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது..

 ஸ்டாலின் ராஜினாமா எப்போது?

ஸ்டாலின் ராஜினாமா எப்போது?

மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும்.. மகாராஷ்டிரா முதல் ராஜினாமா செய்து விட்டார். அதுபோல் தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது... அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது.. இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள்.. வருகின்ற 24 அல்லது 26 ஆகட்டும் யார் இந்துக்களுக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களுக்கு நல்ல காலம்..

திருமாவளவன்

திருமாவளவன்

இந்து பெண்களை அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.. சட்டவிரோதமாக கட்டப்படும் மசூதிகளை மீது கை வைக்க திமுக அரசு தயங்குகிறது... கேரள மாநிலம் கண்ணகி கோயிலை புனரமைக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை செய்யவும் முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.. திருப்பூரில் பனியன் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் பல கட்டடங்களில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள்... இதுதான் திமுகவின் இந்து விரோத ஆட்சி...

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இறைசிந்தனை மிக்கவர்கள்... இருவரும் இணைய இந்துமுன்னணி விரும்புகிறது.. ராஜஸ்தான் டெய்லர் கொலை சம்பவத்தில் வெளிநாடுகளின் சதி உள்ளது... பயங்கரவாதிகளை அடக்க வேண்டும். தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் உள்ளனர்... இங்கு கலவரத்தை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது... இந்து கோயில்களை அறநிலையத்துறையினர் ஆய்வு செய்யலாம். ஆனால் நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்...

 பேரம் - எம்எல்ஏக்கள்

பேரம் - எம்எல்ஏக்கள்

அமைச்சர் சேகர்பாபு கோயில் நிலங்களை மீட்க வேண்டும். வரிப்பாக்கிகளை வசூலிக்க வேண்டும். தமிழக அரசு இந்து கோயில்களை இடித்தது தான் ஓராண்டு சாதனை" என்று கூறினார்.. "ஏற்கனவே பல எம்எல்ஏக்களீடம் பேரம் நடப்பதாக தகவல்கள் வருகிறது, அதுவும் மத்திய உளவுத்துறை மூலமாக தகவல் வெளியாகி வருகிறது அது விரைவில் நடந்தால் நல்லது" என்று காடேஸ்வரா சொல்லி உள்ளது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பி உள்ளது.. அவர்கள் யாராக இருக்கும்?

 திமுக தயார்

திமுக தயார்

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் திமுகவும் தயாராகி கொண்டிருக்கிறது.. குறிப்பாக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து, மிகப்பெரிய கூட்டணியாக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.. இதற்கான முன்னெடுப்புகளும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகின்றன.. மற்றொருபக்கம், தமிழகத்தில் தங்கள் கூட்டணியையும் வலிமையாக வைத்து கொண்டு வருகிறது.

 தேமுதிக - பாமக

தேமுதிக - பாமக

ஆனால், அதிமுக கூட்டணியோ பலவீனமாக உள்ளது.. சமீபகாலமாகவே, அக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கட்சியே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.. விரைவில் அதிமுக உடைந்துவிடுமோ, இரு தரப்பாக பிரிந்துவிடுமோ என்ற கலக்கமும் தொண்டர்களிடம் சூழ்ந்துள்ளது.. பாமகவோ தொடர் தோல்வியை தழுவி வருகிறது. வடமாவட்டங்களில்கூட, செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது.. தேமுதிகவோ அட்ரஸே இல்லாமல் உள்ளது.. அதிமுக கூட்டணியில் ஆக்டிவ்வாக இருப்பது இப்போதைக்கு பாஜகதான் என்பதை மறுக்க முடியாது. அப்படி இருக்கும்போது, திமுகவின் எம்எல்ஏக்களிடம் எந்த கட்சி பேரம் பேசுகிறது? எந்த கட்சியுடன் இணைய திமுக எம்எல்ஏக்கள் அந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 நிஜமா?

நிஜமா?

ஒருவேளை கட்சிக்குள் குழப்பத்தை கொண்டு வர இப்படி ஒரு தகவலை சொல்கிறாரா? அல்லது நிஜமாகவே பேரம் நடந்து கொண்டிருக்கிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.. ஆனால், உளவுத்துறையை இழுத்து வந்து ஆதாரமாகவும் சொல்வதால், இந்து முன்னணி சொல்வதை எளிதாக எடுத்துக் கொண்டும் கடந்துவிட முடிவதில்லை.. எதுவானாலும் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.. பார்ப்போம்.

English summary
when will mk stalin resign like uddhav thackeray, asks hindu munnani leader kadeswara subramaniam திருமாவளவன் பதவியை ராஜினாமா செய்ய காடேஸ்வர சுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X