படித்தது 3ஆம் வகுப்பு.. 3வது முறையாக கவுன்சிலர்.. நெல்லை மேயர் ஆகிறார் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை மறைமுக மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. நெல்லை மாநகராட்சியில் திமுகவே பெரும்பான்மை என்பதால் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், நெல்லை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 51 பேர் திமுக கூட்டணி கவுன்சிலர்கள். திமுக பெரும்பான்மையாக உள்ள நிலையில், சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை முறையாக ஒதுக்கி தரவில்லை எனக் கூறி திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸும் அளித்தனர்.

நெல்லை மேயர் ராஜினாமா: எனினும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டு, சமாதானம் செய்து வைத்தார். இதனால் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கட்சி தலைமை உத்தரவுப்படி கடந்த மாதம் மேயர் சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் கொடுத்த நிலையில் அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நெல்லை திமுக மேயர் வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்: நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நெல்லையின் அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு, நெல்லை எம்.எல்.ஏ அப்துல் வகாப் உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டி.. கூட்டாக அறிவித்த அமைச்சர்கள்!
இந்நிலையில், இன்று திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி, பிற்பகலில் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுகவே பெரும்பான்மை என்பதால் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், நெல்லை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த கிட்டு?: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் 25வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். 3வது முறையாக கவுன்சிலராக இருந்து வருகிறார். அரசியலிலும், மாநகராட்சி பணிகளிலும் அனுபவம் மிக்கவர். கிட்டுவிற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications