ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்
திருநெல்வேலி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த 25 ஆண்டுகளாக திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வந்தார். தற்போது பாஜக மாநில தலைவர் மற்றும் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அவருக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது நயினார் நாகேந்திரனின் விருப்பப்படியே தான் நடந்துள்ளதும், அதன் பின்னணியில் ஜோதிடர் சொன்ன வார்த்தை உள்பட முக்கிய 3 காரணங்கள் உள்ளதாகவும் தகவல்கள் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியான திருநெல்வேலி ஒதுக்கப்படவில்லை.

நயினார் நாகேந்திரன் தற்போது திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாகவும், பாஜக மாநில தலைவராகவும் உள்ளார். இப்படி இருக்கும்போது நயினார் நாகேந்திரனுக்கே, எடப்பாடி பழனிச்சாமி தொகுதி ஒதுக்கவில்லையா? என்று பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நயினார் நாகேந்திரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
25 ஆண்டு அரசியல் முடிவு
இதற்கிடையே தான் நயினார் நாகேந்திரன் கடந்த 25 ஆண்டுகளாக போட்டியிட்டு வந்த திருநெல்வேலி சட்டசபை தொகுதிகளை திடீரென்று அதிமுகவிடம் கொடுத்தது ஏன்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். அதாவது நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அடிப்படையில் பெரும் பண்ணையார். இவரது சொந்த ஊர் பணகுடி அருகே தண்டையார் குளமாகும்.
முதல் முறை வென்றதும் அமைச்சர்
திருநெல்வேலி தொகுதியுடன் நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம் 2001ல் தொடங்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் நயினார் நாகேந்திரனுக்கு திருநெல்வேலி தொகுதியில் சீட் வழங்கினார். 2001 சட்டசபை தேர்தலில் நயினார் நாகேந்திரன் 42,765 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏஎல் சுப்பிரமணியனை (வாங்கிய ஓட்டு 42,043) 722 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், சசிகலாவுடனான நெருக்கத்தால் அமைச்சரும் ஆனார். மின்சாரம், போக்குவரத்து, தொழில்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராக வலம் வந்தார்.
5ல் 3 முறை வெற்றி
அதன்பிறகு 2006 தேர்தலில் திமுகவின் மலைராஜாவிடம் 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக சார்பில் களமிறங்கிய நயினார் நாகேந்திரன் தோற்றார். பிறகு 2011ல் நயினார் நாகேந்திரன் 38,419 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுகவின் ஏஎல்.எஸ். லட்சுமணனை வீழ்த்தினார். 2016 தேர்தலில் திமுகவின் ஏஎல்எஸ் லட்சுமணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் தோற்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதால் 2017ல் பாஜகவில் இணைந்தார். மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் திருநெல்வேலியில் போட்டியிட்டு வென்றார். திமுகவின் ஏஎல்எஸ் லட்சுமணனை 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 5 தேர்தல்களில் வென்ற நயினார் நாகேந்திரன் 2 முறை தோல்வியடைந்தள்ளார்.
இருப்பினும் 2021ல் வென்றதன் மூலமாக தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் மீண்டும் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணியில் அதிமுகவே அந்த தொகுதியை தக்க வைத்துள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த செயலின் பின்னணியில் முக்கியமான 3 விஷயங்கள் உள்ளன.
முதல் விஷயம்
நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநில தலைவராக உள்ளார். இதனால் எப்படியாவது அவரை வரும் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சர் கேஎன் நேருவிடம் தனி அசைன்மென்ட்டை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரன் அந்த தொகுதியில் இருந்து பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இது முதல் விஷயமாகும்.
2வது விஷயம்
2வது விஷயம் என்னவென்றால் கடந்த முறை பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அவர் பாஜக மாநில தலைவராக களமிறங்குகிறார். திருநெல்வேலி தொகுதியில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர். இதனால் அவர்களின் ஓட்டுகள் நயினார் நாகேந்திரனுக்கு கிடைப்பதில் பிரச்சனை உள்ளது.
அதுமட்டுமின்றி விஜய் வேறு தனி கட்சி தொடங்கி வேட்பாளரை அறிவிக்கிறார். இதனால் விஜய் கட்சியும் ஓட்டுகளை பிரிக்கலாம். இது தனது வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நினைத்து அவர் பாஜகவில் திருநெல்வேலி தொகுதியை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
3வது விஷயம்
அதாவது நயினார் நாகேந்திரன் கடந்த 2001 முதல் 2021 வரை 5 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டார். 3 முறை வென்ற அவர் 2 முறை தோல்வியடைந்தார். இதில் 2006, 2016 சட்டசபை தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். தற்போது நடப்பது 2026ம் ஆண்டு. இந்த ஆண்டும் 6 என்ற எண்ணுடன் தான் முடிவடைகிறது. இதனால் 6 என முடியும் ஆண்டு தனக்கு ராசியில்லை என்று நயினார் நாகேந்திரன் நினைப்பதாக கூறப்படுகிறது.
அதோடு அவரது ஜோதிடரும் கூட தொகுதி மாறுவது நல்லது என்று பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியை விட்டு சாத்தூர் பக்கம் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி தொகுதியில்அதிமுகவில் தச்சை கணேசராஜாவை வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications