கிடைச்ச வாய்ப்பை எல்லாம்.. மிஸ் செய்த விஜய்.. ஒரு வார்த்தை கூட பேசலையே.. வரிசையாக சறுக்குறாரே
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் முக்கியமான சில அரசியல் விவகாரங்களில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடர்ந்து வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விடாத மழையிலும் அவர்கள் தொடர் போராட்டம் செய்தனர். ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் சுமார் 150 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் பணியைத் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சென்னை துப்புரவு பணியாளர்கள் போராட்டம் - விஜய் மௌனம்
சென்னை மாநகராட்சி வட்டாரங்களின்படி, நேற்று முதல் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலங்கள் V மற்றும் VI) திடக்கழிவு மேலாண்மைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் மூலம் சுமார் 150 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் பணியைத் தொடங்கினர். வரும் நாட்களில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
"இந்தப் பணியாளர்கள் இதற்கு முன்னர் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM) மூலம் சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்தவர்கள். தற்போது சம்மதக் கடிதங்களைச் சமர்ப்பித்து புதிய நிறுவனத்தில் இணைந்துள்ளனர். ஒப்பந்தத்தின்படி 3,809 சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க நிறுவனம் தேவைப்பட்டாலும், இதுவரை 1,770 பேரை மட்டுமே நியமித்துள்ளது. மீதமுள்ள 2,039 பணியிடங்கள் (மண்டலம் V-ல் 975 மற்றும் மண்டலம் VI-ல் 1,059) தற்போது போராடி வரும் NULM பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது" என்று மாநகராட்சி அறிவித்தது.
ஆனால் இந்த போராட்டத்திற்கு விஜய் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஏன் அறிக்கை கூட வெளியிடவில்லை. இது எதை பற்றியும் பேசாமல் விஜய் மௌனமாக இருந்தும் வருகிறார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் விஜய் அமைதியாக உள்ளார்.
விஜய் வாக்காளர் விவகாரம் மௌனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார். அவர் தனது புகாரில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்? பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்?
ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் தப்ப முடியாது. இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம். தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார். உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் பணியாற்றினாலும் சரி. போலி முகவரிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று இல்லாத முகவரியில் இருப்போர்.. நீங்கள் அங்குத் தேடிச் சென்றால் அதுபோல எந்தவொரு முகவரியும் இருக்காது இருக்காது. மற்றொன்று, வீடு எண் 0, தெரு எண் 0 போன்ற செல்லாத முகவரிகள். இறுதியாக, உறுதிப்படுத்த முடியாத முகவரிகள் இருக்கும். இத்தகைய போலி முகவரிகள் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40,000க்கும் மேல் இருக்கிறது, என்றார்.
நாட்டையே உலுக்கி உள்ள இந்த விவகாரத்தில் பாஜக மீது கடும் புகார்கள் வைக்கப்படுகின்றன. பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறும் அதே விஜய்.. இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
ஆணவக்கொலை சம்பவம் - விஜய் அமைதி
நெல்லையில் நிகழ்ந்த ஆணவக் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியைக் கவின் காதலித்து வந்தார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இவர்களின் காதல், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நீடித்தது.
ஒரு கட்டத்தில், கவினைச் சந்திக்க அழைத்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, சுர்ஜித் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி, தந்தை சரவணன் ஆகியோரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது. உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்த அவர்கள் இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை கவின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவரது குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
திமுக எம்பி கனிமொழி ஆறுதல்
தாய் மட்டுமே கைது செய்யப்படாத நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து, ஆறாவது நாளில் குடும்பத்தினர் சம்மதித்து கவின் உடலைப் பெற்று இறுதிச் சடங்குகளைச் செய்தனர். கடந்த வாரம் கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது. இத்த தகனம் நிகழ்வின் இறுதி அஞ்சலியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
ஆணவக் கொலையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவினின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். கவினின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டு, அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இதற்கிடையே, கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் தமிழ்வாணனின் கோரிக்கையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுக பேசியது - தவெக பேசவில்லை
இப்படி கவின் கொலை விவகாரத்தில் திமுக கண்டனம் செலுத்தவில்லை என்றாலும் கூட நேரில் ஆறுதல் செலுத்தியது. முதல்வரே போன் செய்து பேசி இருக்கிறார். ஆனால் மாற்று அரசியல் என்று பேசும் விஜய் அப்படி செய்யவில்லை. நெல்லை கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் விஜய் இன்னமும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆறுதலும் தெரிவிக்கவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. மாற்று அரசியல் என்கிறார்.. அம்பேத்கார், பெரியார் கொள்கை தலைவர்கள் என்கிறார். ஆனால் ஜாதி ஆணவக்கொலைக்கு கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். விஜய் ஒரு பெரிய புள்ளியின் கண்ட்ரோலில் இருக்கிறார். அவர் ஒரு வியூக வகுப்பாளர். அவர்தான் விஜயை இதை பற்றி பேச விடாமல் தடுத்துவிட்டார். இதை எல்லாம் பற்றி பேசினால் தென் மண்டலத்தில் வாக்கு கிடைக்காது என்று தடுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன.
சரியாக சொல்லப்போனால் ஜாதி வாக்குகள் காரணமாக பொதுவாக இந்த விவகாரங்களில் திமுக அதிமுக மௌனமாக இருப்பதாக புகார்கள் வைக்கப்படும். ஆனால் திமுகவே இந்த முறை பேசிவிட்டது. ஆனால் மாற்று அரசியல் என்று பேசும் விஜய் அப்படி செய்யவில்லை. தொடர்ந்து மௌனம் காக்கிறார். நெல்லை கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications