முள் செடியில் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது இஷானி.. 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
4 வயது சிறுமி கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது
Recommended Video
திருவள்ளூர்: 4 வயசு பெண் குழந்தையை நாசம் செய்து முள்ளுசெடியில் வீசப்பட்ட சம்பவத்தில் 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

4 வயது குழந்தை
இவரது 4 வயசு பெண் குழந்தை இஷானி நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானாள். இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.

ரத்த காயங்கள்
இந்நிலையில், நேற்று காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்த நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் கைது
இது சம்பந்தமான விசாரணையில், சிறுமியை அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மிராசு வயது 25, சந்திரபானு வயசு 60, ஆகிய 2 தொழிலாளர்கள் உட்பட 3 பேர் வெளியே அழைத்து சென்றனர் என்றும், அப்போது அவர்கள் 3 பேருமே மது போதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்றும் சொல்லப்பட்டது.

முன்னுக்கு பின் முரண்
இதையடுத்து அவர்களிடம் போலீசார் நேற்றிலிருந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஆனால், 3 பேருமே முன்னுக்கு முரணாக பேசி வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. எனினும் விரைவில் குழந்தை இறந்தது குறித்த அனைத்து விவரங்களையும் கண்டுபிடித்துவிடுவோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications