இது திராவிட மண்... ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை... ரஜினிகாந்த் மீது கே.பி.முனுசாமி பாய்ச்சல்..!
திருவள்ளூர்: நடிகர் ரஜினிகாந்தால் தமிழகத்தில் எதையும் மாற்ற முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு மட்டும் தான் ஆன்மிக அரசியல் தெரியுமா என்றும் இது திராவிட மண் என்பதால் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என ஓ.பி.எஸ். பதில் அளித்துள்ள நிலையில் கே.பி.முனுசாமி அதற்கு நேர்மாறாக ரஜினி மீது பாய்ந்துள்ளார்.

நேர்மையான ஆட்சி
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தால் எதுவும் செய்ய இயலாது என மிகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. என்ன ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது என்றும் ஏன் அதிமுக நேர்மையான ஆட்சியை தரவில்லையா எனவும் ரஜினிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்ற முடியாது
கம்யூனிஸ்ட், பாமக, போன்ற கட்சிகள் எல்லாம் நேர்மையான ஆட்சியை விரும்பவில்லையா என்றும் ஏதோ தாம் ஒருவர் மட்டுமே நேர்மையான ஆட்சியை விரும்புவது போல் ரஜினிகாந்த் பேசி வருவதாகவும் சாடியுள்ளார். ரஜினி ஒரு சாதாரண ஆள் என்றும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் ஆண்ட இந்த திராவிட மண்ணில் அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனக் கூறியுள்ளார்.

மாறுபட்ட கருத்து
ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் ஓ.பி.எஸ். ஒரு கருத்துக் கூறியிருக்கும் நிலையில் அதில் உடன்பாடில்லை என்பதை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார் கே.பி.முனுசாமி. இதன் மூலம் கட்சியில் ஓ.பி.எஸ்.சுக்கான செல்வாக்கு மீண்டு சரியத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வெட்ட வெளிச்சம்
இதனிடையே ரஜினிகாந்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து பேசிய ஒரே நாளில் அதிமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான கே.பி.முனுசாமி ரஜினியை விமர்சித்து வசைபாடியுள்ளார். இதன் மூலம் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications