திருவள்ளூர் அருகே திடீர் பதற்றம்-தண்டவாளத்தில் விரிசல்- பொன்னேரியில் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் 1 மணிநேரம் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னை நோக்கி வந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் அண்மையில் பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காயங்களின்றி உயிர் தப்பினர்.

கவரைப்பேட்டை ரயில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த ரயில் விபத்து திட்டமிட்ட நாசவேலையாகவே சந்தேகிக்கப்பட்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
சென்னை நோக்கி வந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் நிலைமை என்னவென்று புரியாமல் தத்தளித்தனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1 மணிநேரத்தில் ரயில்வே தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு பின்னர் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல இயக்கப்பட்டன. ரயில்வே தண்டவாள விரிசல் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications