Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏ.. தள்ளு".. பிரசவம் முடிஞ்ச 5வது நிமிஷமே.. வெளியே டீ குடிக்க போன சங்கீதா.. அப்புறம் என்னாச்சு பாருங்க

பெற்ற குழந்தையை திருடி விட்டார்கள் என்று இளம்தாய் கதறி ரகளை செய்தது பரபரப்பை தந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: பிரசவம் முடிந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், மருத்துவமனையில் தன்னுடைய குழந்தையை காணோம் என்று இளம்பெண் ரகளை செய்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி.. இவரது மனைவி பெயர் சங்கீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இந்த தம்பதிக்கு கல்யாணமாகி ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.

இந்நிலையில் சங்கீதா கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது.. பிறகு, நேற்றுமுன்தினம் பிரசவவலியும் வந்துள்ளது.. இதற்காக வேலப்பன்சாவடி பகுதியிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கர்ப்பம்

கர்ப்பம்

பிரசவத்திற்காக தன்னுடைய அம்மாவுடன் சென்றுள்ளார் சங்கீதா.. பிறகு சிறிது நேரத்தில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கணவருக்கும், உறவினர்களுக்கும் சங்கீதா போனை போட்டு சொல்லி உள்ளார்.. அத்துடன், குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார் சங்கீதா.. இதை பார்த்ததும் பூரித்து போன அனைவரும், மருத்துவமனைக்கு கிளம்பி வந்து குழந்தையை பார்க்க போவதாக சொன்னார்கள்.

டிவி சீரியல்கள்

டிவி சீரியல்கள்

அதற்கு சங்கீதா, "பிறந்த குழந்தைக்கு திடீர்னு மூச்சுத்திணறல் வந்துவிட்டது.. அதனால், டாக்டர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று சொல்லி, என்னிடமிருந்து எடுத்து சென்றனர்.. இப்போது குழந்தை எங்கே என்று கேட்டால், எனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றுகின்றனர்" என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்து போன கணவரும், உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.. குழந்தை எங்கே என்று கேட்டு, அங்கு டாக்டர்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்..

பிரசவம்

பிரசவம்

இந்த நேரத்தில் சங்கீதாவும் கத்திகூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.. "குழந்தையை இன்குபேட்டரில் வைக்க வேண்டும், அதுவரை வெளியே போய் டீ குடிச்சிட்டு வருமாறு டாக்டர்கள் என்னிடம் சொன்னார்கள்.. அதனால்தான் நான் வெளியே வந்துவிட்டேன்.. மறுபடியும் உள்ளே சென்றபோது, குழந்தையை எடுத்து வைத்துக்கொண்டு தர மறுக்கிறார்கள்.. எனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்கிறார்கள்.. இதோ பாருங்க, குழந்தை பிறந்ததுமே நான் எடுத்த போட்டோ" என்று அங்கிருந்த அனைவருக்கும் செல்போனில் உள்ள குழந்தையின் போட்டோவை சங்கீதா காட்டினார்.

கர்ப்பம் சங்கீதா

கர்ப்பம் சங்கீதா

இந்த பிரச்சனை பெரிதாக வெடித்ததும், விஷயம் திருவேற்காடு பகுதி போலீஸாருக்கு சென்றுள்ளது.. இதனால், போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து ஊழியர்கள் மற்றும் பெண்ணின் கணவர் குடும்பத்தினரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.. இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... கடைசியில் பார்த்தால், சங்கீதா நிஜமாகவே கர்ப்பம் தரிக்கவேயில்லையாம்.. கர்ப்பமானதாக சொல்லப்பட்ட நாள் முதல் இதுவரை எந்த மருத்துவமனையிலும் எந்தவிதமான சிகிச்சையும், அதுக்கான செக்கப்பும் செய்யவில்லை என்பதும், பிரசவத்திற்காக வந்த தனியார் மருத்துவமனையிலும் எந்தவிதமான அனுமதி சீட்டும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

மெடிக்கல் செக்கப்

மெடிக்கல் செக்கப்

அதுமட்டுமல்ல, அவராகவே மருத்துவமனைக்கு வந்த கொஞ்ச நேரத்தில், குழந்தை பிறந்ததாகவும், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைய எடுத்து வைத்துகொண்டு ஏமாற்றுவதாகவும் சொல்லி பிரச்னை செய்துள்ளார் என்பதும் உறுதியானது.. இதற்கு பிறகு, சங்கீதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.. போலீசாரின் ஆலோசனைபடி சங்கீதாவுக்கு மெடிக்கல் செக்கப்பும் செய்யப்பட்டது.. அதில் கர்ப்பமானதற்கான அறிகுறியோ, குழந்தை பிறந்ததற்கான அறிகுறியோ இல்லை என்பது உறுதியானது.. கல்யாணமாகி ஒரு வருடம் ஆனதால் தான் கர்ப்பமடைந்ததாக கணவர் குடும்பத்தை நம்ப வைத்து வந்திருக்கிறார்.

வளைகாப்பு சீமந்தம்

வளைகாப்பு சீமந்தம்

இதற்காக வயிற்றில் துணியை சுற்றிக்கொண்டு கர்ப்பிணி போல நடித்து வந்திருக்கிறார்.. இதை உண்மை என்று நம்பி, இவர்கள் குடும்பத்தில் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள்.. வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார் சங்கீதா.. நேற்று முன் தினம் இரவு, பிரசவ வலி வந்ததுபோல அழ ஆரம்பித்துள்ளார்.. அதற்கு பிறகுதான், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, தன்னுடைய அம்மாவுடன் வந்து சேர்ந்துள்ளார்.. மருத்துவமனைக்கு உள்ளே வந்ததும, கர்ப்பமாக இருப்பதாகவும், வயிறு வலிப்பதாகவும் டாக்டர்களிடம் சொல்லி உள்ளார்..

மாமியார் ஷாக்

மாமியார் ஷாக்

அப்போது, டாக்டர்கள் இப்போதைக்கு மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்களாம். இதையடுத்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்த சங்கீதா, கொஞ்ச நேரத்தில் ஒரு குழந்தையின் போட்டோவை கணவருக்கு அனுப்பி வைத்துவிட்டு இப்படி ரகளை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.. கர்ப்பமாகாமலேயே கர்ப்பிணி போல இத்தனை மாத காலம் நடித்ததுடன், ஆஸ்பத்திரி வந்தும் அந்த நடிப்பை தொடர்ந்துள்ளார் சங்கீதா.. இதையெல்லாம் கேட்டு கணவரும், மாமியார் வீட்டினரும் அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டனர்..

உறைந்த சங்கீதா

உறைந்த சங்கீதா

மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம், அப்படியே டிவி சீரியலில் வருவதுபோலவே இருந்தது.. இறுதியில், அந்த பெண்ணையும், அவரது அம்மாவையும் கடுமையாக எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்... இவ்வளவு பெரிதாக பிரச்சனை வெடிக்கும் என்று சங்கீதா எதிர்பார்க்கவேயில்லையாம்.. குழந்தையை காணோம் என்றதும், சங்கீதாவின் கணவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு விட்டாராம்.. அவரது அந்த ஆவேசமான ஆர்ப்பாட்டத்தை பார்த்ததும், சங்கீதாவுக்கே தூக்கி வாரிப்போட்டுள்ளது.. அதற்குள் மருத்துவமனை நிர்வாகமே, போலீசாருக்கு தகவல் சொல்லவும், நிஜமாகவே வெலவெலத்து போய் நின்றாராம் சங்கீதா...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+