வசமாய் சிக்கிய தவெகவினர்.. திருத்தணி கோவிலுக்கு சென்றவர்கள் மீது பாய்ந்த வழக்கு.. காரணத்தை பாருங்க
திருவள்ளூர்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் அரசியல் மாநாடு என்பது விக்கிரவாண்டியில் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் அந்த கட்சியினர் சிறப்பு பூஜை மேற்கொண்ட நிலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு என்பது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்த அரசியல் மாநாட்டில் தான் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் கொடிக்கான விளக்கத்தை விஜய் அறிவிக்க இருக்கிறார்.
இதனால் இந்த அரசியல் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் கோவில்களில் சிறப்பு பூஜை, பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் சென்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் என்ற குட்டி தலைமையில் நிர்வாகிகள் சென்றனர். நடிகர் விஜயின் கட்அவுட்டை பிடித்தபடி தமிழக வெற்றிக் கழகத்தினர் மாடவீதியில் ஊர்வலமாக சென்றனர். மேலும் 100 அடி நீளம் கொண்ட கட்சி கொடியுடன் சென்றனர். அதன்பிறகு அவர்கள் கோவிலில் சிறப்பு பூஜைக்கு கட்டணம் செலுத்தி மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.
சிறப்பு பூஜையை முடித்துவிட் டு வெளியே வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக கூறினர். இதையடுத்து கோவில் இணை ஆணையர் ரமணி புகாரில் போலீசார் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 30க்கும் அதிகமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications