திருவள்ளூரில் மாஸ்டர் பிளான்.. குத்தம்பாக்கத்தில் திரைப்பட நகரம்.. எங்கே திரும்பினாலும் ஏசி.. சபாஷ்
திருவள்ளூா்: திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் விரைவில் அதிநவீன திரைப்பட நகரம் அமைய போகிறது.. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழக அமைச்சர் மகிழ்ச்சி தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சட்டசபை பட்ஜெட்டில், செய்தித் துறை மானியக் கோரிக்கையின்போது, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

பூந்தமல்லி: இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலம் 100 ஏக்கர் உள்ளதால், அதி நவீன திரைப்பட நகரம் அமைக்க இந்த இடம் வசதியாக இருக்கும்? என்றும் பரிசீலிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடனடியாக வெள்ளவேடு சென்று நேரடியாகவே ஆய்வு மேற்கொண்டார்.. திரைப்பட நகரம் அமைவதுடன், அதற்கு தேவையான வசதிகளையும் அதே இடத்தில் நிறுவ முடியுமா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் உதயநிதி விரிவாக கேட்டறிந்தார்.. எனினும், திரைப்பட நகரம் அமைக்க வேண்டுமானால், அதற்கு பலகட்ட ஆலோசனைகளை நடத்த வேண்டியிருப்பதால், அவைகள் எல்லாம் நடத்தி முடிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

ஸ்டாலின் உறுதி: இதற்கு பிறகு நடந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவில், முதல்வர் ஸ்டாலின், பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்ததுடன், இந்த நவீன திரைப்பட நகரில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 ஸ்டார் ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகளும் ஆரம்பமாகின.. பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
ஓட்டல்கள்: புதிதாக அமைய போகும் திரைப்பட நகரத்தில் பிரம்மாண்ட ஸ்டுடியோ, ஷூட்டிங் ஸ்பாட்கள், படப்பிடிப்பு VFX அறைகள், டிவி ஸ்டுடியோ போன்றவையும் அமைய உள்ளன.. இவைகளுடன் பணிமனை, ஓட்டல்கள், ஆபீஸ்கள், டப்பிங், எடிட்டிங், கூட்ட அரங்கம், முதலுதவி அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது...

இதையடுத்து, மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் இதற்கான டெண்டரை கோரியது.. கடந்த சில மாதங்களாகவே, குத்தம்பாக்கத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன...
சாமிநாதன்: இப்படிப்பட்ட சூழலில், குத்தம்பாக்கத்தில் அதிநவீன திரைப்பட நகரம் விரைவில் அமையப்போவதாக, செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மகிழ்ச்சி தகவலை தற்போது கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.. இதையடுத்து செய்தியாளா்களிடம் அவர் பேசியபோது:
"எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் இப்போது செயல்பட்டு வரும், AC ஷூட்டிங் ஸ்பாட்டை போலவே, மேலும் 3 புதிய அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த இடங்களிலும் பணிகள் ஆரம்பமாகும்.. தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் ரூ.500 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தாா்.
அதிக வளர்ச்சி: அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், குத்தம்பாக்கத்தில் சுமாா் 152 ஏக்கா் பரப்பில் புதிய இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் அந்த இடத்தை பார்வையிட்டு இருக்கிறார். விரைவில் பணிகள் துவங்க இருக்கிறது. திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது" என்றார்... இந்த திரைப்பட நகரம் கட்டப்பட்டுவிட்டால்,. திருவள்ளூர் உள்ளிட்ட அதிக அளவில் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications