முள் செடியில் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது சிறுமி.. திருவள்ளூரில் அதிர்ச்சி!
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்
திருவள்ளூர்: காணாமல் போன 4 வயசு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்ட கொடூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

4 வயது குழந்தை
இவரது 4 வயசு பெண் குழந்தை ஈசானி மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானது. இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.

சூளை
இந்நிலையில், காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்து நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுபோதை
இது சம்பந்தமான விசாரணை துவங்கி உள்ளது. அதில், சிறுமியை அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மிராசு வயது 25, சந்திரபானு வயசு 60, ஆகிய 2 தொழிலாளர்கள் வெளியே அழைத்து சென்று உள்ளனர். அப்போது அவர்கள் இருவருமே மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை?
உடலெங்கும் காயங்கள் இருப்பதால், குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர்களை விசாரித்து வருகிறார்கள். விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான் முழு விவரமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாநில தம்பதியின் 4 வயசு குழந்தை நாசமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி நிறைந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications