சாவை சட்டைப்பையில் வைத்து செல்கிறான்.. என்கவுன்ட்டரில் பலியான சண்டே சதீஷ் ஃபேஸ்புக் ஸ்டோரி வைத்தாரா?

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: சோழவரம் பகுதியில், போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான ரௌடி சண்டே சதீஷ், தனது ஃபேஸ்புக் ஸ்டோரியில், "தன் சாவை சட்டைப் பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்" என்ற வரிகள் இடம்பெறும் பாடலை பதிவிட்டதாக தகவல் பரவியது.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர்.

Is Rowdy Sunday sathish posted Vettaiyadu vilaiyadu song in facebook story?

தொடர்ந்து முத்து சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள புதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்து சரவணனை பிடிக்க இன்று அதிகாலையில் அப்பகுதிக்கு போலீசார் சென்றுள்ளனர். அவருடன் சண்டே சதீஷ் என்ற மற்றொரு ரவுடியும் இருந்துள்ளார்.

இருவரையும் பிடித்து சோழவரம் அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் இருவரும் தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காலில் அடிபட்ட சண்டே சதீஷ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் ரவுடி முத்து சரவணன் உயிரிழந்தார். ரவுடி சண்டே சதீஷ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.

Is Rowdy Sunday sathish posted Vettaiyadu vilaiyadu song in facebook story?

இதேபோல செங்கல்பட்டு பெரியபாளையம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான தணிகா மீது திருவாரூர் திமுக பிரமுகர் பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு, கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு கொலை வழக்கு, அதிமுக பிரமுகர் கே.கே.நகர் விஸ்வநாதன் கொலை வழக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு தணிகாவை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கிய நிலையில், தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் தணிகா உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தணிகா சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று திருவள்ளூரில் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் , சண்டே சதிஷ் ஆகியோரும் தணிகாவின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி சண்டே சதீஷ், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான்.. என்றாலும் காக்கி சட்டையை தான் கை பிடித்தான்.. தன் சாவை சட்டைப் பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்" என்ற வேட்டையாடு விளையாடு படத்தின் பாடலை ஸ்டோரியில் வைத்திருந்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், நாம் ஆராய்ந்ததில், சண்டே சதீஷ் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இயங்கும் அந்தக் கணக்கு இன்றுதான் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. ரௌடி சண்டே சதீஷ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது பெயரில், அவரது புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி, "தன் சாவை சட்டைப் பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்" என்ற வரி இடம்பெறும் பாடலை ஸ்டோரியில் வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+