நாளை மறுநாள் திருமழிசை ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைந்துள்ள ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயிலில், நாளை மறுநாள் (பிப். 7-ம் தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேக வி\ழாவையொட்டி மங்கள இசை, கோ பூஜை, மகா கணபதி ஹோம கடந்த வாரம் தொடங்கின. இதைத் தொடர்ந்து குரு வந்தனமும், லட்சுமி கணபதி பூஜையும், மஹா லட்சுமி ஹோமமும், வாஸ்து சாந்தியும், பிரவேச பலியும், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Othandeeswarar temples kumbabishekam will be held on Feb 7

விழாவையொட்டி தினமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல், கால பூஜை தொடங்கி, தொடர்ந்து 12 கால பூஜைகள் நடைபெறுகிறது. மகா கும்பாபிஷேக நாளான வரும் 7ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு, 12-ம் கால பூஜைகள் துவங்கி, அங்குரார்ப்பணமும், சிவசூர்ய பூஜையும், பின்னர் காலை 7.20 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், கலசங்கள் புறப்பாடும் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, காலை 9:30 மணியளவில், ராஜகோபுரம் மற்றும் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பின், 10.20 மணியளவில் பரிவாரங்கள் மற்றும் மூல லிங்க மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெறவுள்ளன.

7-ம் தேதி மாலை 7.00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும், 8-ம் தேதி முதல் மண்டலாபிஷேகமும் நடைபெறும் என கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த கோயில் 11 ஆவது நூற்றாண்டில் இரண்டாவது குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலின் அம்பாளின் பெயர் குளிர்வித்தநாயகி.

இங்குள்ள நடராஜர் அம்பாளை பார்த்தபடியும் அம்பாள் நடராஜரை பார்த்தபடியும் நடுவில் நந்தியும் உள்ளனர். இந்த நிலையில் உள்ள நடராஜரையும் அம்பாளையும் வணங்கினால் தம்பதியிடையே உள்ள பிரச்சினைகள், சஞ்சலங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+