Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாசில்தார், விஏஓ-வை "தூக்கியடித்த" தமிழக அரசு.. ஐசியூவில் கும்மிடிப்பூண்டி இளைஞர்.. பரபர திருவள்ளூர்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், தேர்வழியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் 3 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் மலைக்கு அருகில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், கூடவே இலவச வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Tahsildar VAO Tiruvallur Gummidipoondi

காலி மனை: ஆனால், இந்த இடத்தில் பயனாளிகள் பல ஆண்டுகளாகவே வீடு கட்டி குடியேறாமல், காலி மனைகளாக விட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் சார்பில் அந்த இடத்தில், "இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்ட இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

இந்த அரசு வைத்துள்ள போர்டினை பார்த்ததுமே 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் சிலர், கூரை மற்றும் சிமெண்ட் ஷீட் வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. அத்துடன், அந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்டு, மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு தந்திருக்கிறார்கள்.

அரசு நிலம்: ஆனால், ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய்த் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.. இதைப்பார்த்ததுமே அங்கு வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதார்கள்.. ஆர்.கே.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, தன்னுடைய வீட்டை இடித்ததற்கு இளைஞர் ஒருவர், அதிகாரிகள் முன்னிலையிலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துவிட்டது.. கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வழி ஊராட்சி நேதாஜி நகரைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் ராஜ்குமாா். மனைவியை பிரிந்து வாழ்ந்த வந்த ராஜ்குமாா், தன்னுடைய அம்மா கல்யாணி மற்றும் 4 வயது மகளுடன் குடிசை வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

பாதுகாப்பு: இந்நிலையில் அப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக வண்டி பாட்டை வகைப்பாட்டில் இருந்த அந்த குடிசை வீட்டை அகற்ற உதவி ஆட்சியா் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினா், போலீஸாரின் பாதுகாப்போடு ராஜ்குமாரின் வீட்டை இடிக்க முற்பட்டார்கள்.. அப்போதுஅவா், ஒரு வாரம் அவகாசம் தரவேண்டும் என்றும், மாற்றிடம் ஏற்பாடு செய்துக்கொண்டு, வீட்டில் இருந்து பொருள்களை எடுத்துக் கொண்டும் வெளியேறிவிடுவதாக சொன்னார்.

ஆனால், மின்வாரியத் துறையினர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். வருவாய்த் துறையினா் ஒப்புக் கொள்ளாமல் வீட்டை அகற்றும் பணியிலும் ஈடுபட முயன்றனர். அப்போது வீடு இடிப்பதை தன்னால் தாங்கி கொள்ள முடியாத ராஜ்குமாா், வீட்டை பூட்டிக்கொண்டு உடலின் மீது தீ பற்ற வைத்துள்ளார். இதனை கண்டதும் போலீசார் முன்னெச்சரிக்கையாக வைத்திருந்த தீயணைப்பு கருவி மூலம் ராஜ்குமாா் உடலில் பற்றிய தீயை அணைத்தனா். ஆனால் அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறிக்கொண்டு ஓடியுள்ளார்.

கண்டனம்: பிறகு அவருக்கு கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அதிகாரிகள் கண்முன்னே நடைபெற்ற தற்கொலை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சை: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஒ. பாக்கிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது தீக்குளித்த ராஜ்குமார், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

கோட்டக்கரையில் இளைஞர் தீக்குளித்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் 3 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+