“விஜய ஜெயா” என குழந்தைக்கு பெயர் வைத்த பிரேமலதா.. “அம்மா” பாசத்துல அதிமுகவையே மிஞ்சிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பெண் குழந்தைக்கு 'விஜய ஜெயா' என பெயர் சூட்டியுள்ளார்.

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, பாஜக சார்பில் பொன் பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

Premalatha Vijayakanth named the baby girl as Vijaya Jaya

இந்நிலையில் திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆதரவாக திறந்த பிரச்சார வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது, தேமுதிக தொண்டர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு, பிரேமலதாவிடம் கூறினார். இதையடுத்து, குழந்தையை கையில் வாங்கிய பிரேமலதா, அந்த குழந்தைக்கு 'விஜய ஜெயா' எனப் பெயர் சூட்டினார். அதை மைக்கிலும் அறிவித்தார்.

பிரச்சாரம் மேற்கொள்ளச் செல்லும் இடங்களில் எல்லாம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை புகழ்ந்து பேசி வருகிறார் பிரேமலதா. இந்நிலையில், விஜயகாந்த் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் இணைத்து குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

Premalatha Vijayakanth named the baby girl as Vijaya Jaya

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "துளசி கூட வாசம் மாறும், நமது தவசி வாசம் மாறாது. அன்னதான பிரபுவாகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். மக்கள் மனதில் வாழ்கிறார். மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த 3 தெய்வங்களின் கூட்டணி வெற்றி பெறும்.

சத்துணவு திட்டத்தை எம்ஜிஆரும், அம்மா உணவகத்தை ஜெயலலிதாவும், ஏழை மக்களுக்கு விஜயகாந்த் உணவு வழங்கினர். முரசு சின்னத்தில் வாக்களித்து லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் நல்லதம்பியை வெற்றி பெற செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

பல நாட்களாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்தது தேமுதிக. எனினும், இந்தக் கூட்டணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி வருகிறார் பிரேமலதா.

இந்நிலையில் தான், குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரையும், தனது கணவரான விஜயகாந்த் பெயரையும் இணைத்து பெயர் சூட்டியுள்ளார் பிரேமலதா. அம்மா பாசத்துல அதிமுக தொண்டர்களையே மிஞ்சிட்டாங்க பிரேமலதா என அதிமுக, தேமுதிக தொண்டர்களே கமெண்ட் அடிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+