அன்று மட்டும் தெளிவா பேசறாருன்னீங்க!.. இன்னிக்கு குழப்புறாரா?.. தமிழிசைக்கு ரஜினி ரசிகர்கள் கேள்வி
திருவள்ளூர் : பாஜகவுக்கு ஆதரவாக பேசினால் ரஜினிகாந்த் தெளிவாக பேசுகிறார் என்றும் எதிராக பேசினால் மக்களை குழப்புகிறார் என்றும் மாற்றி மாற்றி தமிழிசை சவுந்திரராஜன் சர்ட்டிபிகேட் கொடுக்கிறார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள்.
எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார்.

ஆதரவு
இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இந்த நிலையில் சூர்யாவின் பேச்சுக்கு கமல்ஹாசன், சீமான், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

புதிய கல்விக் கொள்கை
இந்த நிலையில் சூர்யாவின் காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரியவந்தது. புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழிசை
இந்த விஷயத்தில் சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என ரஜினி பேசினார். திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிச்சயம்
அப்போது அவர் கூறுகையில் ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள். புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக கிடைக்கும் என தெரிவித்தார். ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக பேசினால் தெளிவாக பேசுகிறார் என்றும் மக்களுக்கு ஆதரவாக பேசினால் குழப்புகிறார் என்றும் கூறியுள்ள தமிழிசைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications