உச்சக்கட்ட பரபரப்பு.. தூக்கில் தொங்கிய பெண்.. "கதவை உடை" எகிறிய அமைச்சர்.. உயிருடன் மீட்ட திமுகவினர்
திருவள்ளூரில் திமுக நிர்வாகிகள் இளம்பெண்ணை மீட்டுள்ளனர்
திருவள்ளூர்: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகிகள், தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க போகிறது.. இந்த முறையும் திமுக கூட்டணியுடன் போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, பாமக, கட்சிகள் தனித்து களமிறங்க போகின்றன.
நேற்றைய தினம் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது... எனவே கடைசி நாள் என்பதால், அனைத்து கட்சியினரும் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இளைஞர்கள்
அந்த வகையில், திருவள்ளூர் நகராட்சியில் ஆயில் மில் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுகவினர் பிஸியாக இருந்தனர்... பிரச்சாரத்தின் நடுவில், சட்டமன்ற உறுப்பினர் தற்காலிக அலுவலகம் அருகே, திமுகவினர் சிலர் டீ குடிக்க சென்றார்கள்.. அப்போது டீ கடை அருகிலிருந்த வீட்டில் 2 இளைஞர்கள் வீட்டின் பின்பகுதி கதவை தங்களுடைய கால்களால், வேக வேகமாக எட்டி எட்டி உதைத்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

குடும்ப தகராறு
இதனால் டீ குடிக்க வந்த திமுகவினர், அந்த வீட்டுக்கு பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. என்ன ஏதென்று விசாரித்தனர்.. அப்போதுதான், அந்த வீட்டு பெண் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்... இதைக் கேட்டதும் அதிர்ந்து போன திமுகவினர், பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மற்ற நிர்வாகிகளுக்கும் தகவல் சொன்னார்கள்.. அவர்களும் இந்த வீட்டுக்கு ஓடிவந்தனர்..

அமைச்சர் நாசர்
எல்லாருமே சேர்ந்து கதவை உடைக்க முயற்சி செய்தனர். அதற்குள் விஷயம் தெரிந்து பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர், அந்த பெண்ணை உடனடியாக மீட்க சொன்னார்கள்.. இதனால், அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து, அனைத்து திமுகவினரும் ஒன்று கூடி, அந்த கதவை உடைத்தனர்.. உள்ளே சென்று பார்த்தபொது, அந்த பெண், ஃபேனில் புடவையை கட்டி, அந்த பெண் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்..

ஆறுதல்
ஆனால், உடனடியாக அவரை உயிருடன் மீட்டுவிட்டனர்.. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்த பெண்ணை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதுமட்டுமல்லாமல், எம்எல்ஏ ராஜேந்திரன் அந்த மருத்துவமனைக்கே நேரில் சென்று, பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி தேவையான உதவிகளை செய்வதாக உறுதி தந்துள்ளார்.. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில், பெண்ணை உயிருடன் மீட்ட இந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அமைச்சரை தெரியும்னு யாராவது வந்தால் வெளிய துரத்துங்க.. ஜூலை 1 முதல் மாற்றம்.. ராஜ்மோகன் அதிரடி












Click it and Unblock the Notifications