திருவள்ளூரில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல்.. விசிக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: திருவள்ளூர் மணவாள நகர் அருகே நுங்கம்பாக்கத்தில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி மாமூல் கேட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட விசிக துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து தொழிற்சாலையின் நிர்வாகி விஸ்வநாதன் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசிக பிரமுகர் எஸ்கே குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவள்ளூர் அருகே மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் எஸ் கே குமார் என்பவர் மீது துப்பாக்கி தொழிற்சாலையின் நிர்வாகி விஸ்வநாதன் என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணவாள நகர் காவல் துறையினர் விசிக பிரமுகர் எஸ்கே குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அவர்களின் பரிந்துரையின் பேரில், விசிக பிரமுகர் எஸ்கே குமார் மீது குண்டச்சட்டம் பதிவு செய்து திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த நிலையில் திருவள்ளூர் விசிக பிரமுகர் எஸ்கே குமார், தனியார் துப்பாக்கி தொழிற்சாலை முன்பு டவேரா வேனில் மூன்று பேருடன் சென்று இறங்குவதாக வீடியோ உள்ளது. மேலும் அவர்கள் தொழிற்சாலை கேட் முன்பு நின்று நிர்வாகி வெளியில் வரவழைத்து பேசுவதும், அந்த நிர்வாகி கோபத்துடன் கிளம்பிச் செல்வதும் உள்ளிட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசிக பிரமுகர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications