சைக்கோ சிலம்பரசன்.. கும்மிடிப்பூண்டி பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! பதைபதைக்க வைத்த வாக்குமூலம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற கொலை சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து கணவன் உடலை பேரலில் அடைத்து சுடுகாட்டில் புதைத்துள்ளார். இந்த நிலையில் மனைவியின் மீது சந்தேகம் கொண்டதால் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறி அதிர வைத்திருக்கிறார் கொலைகார கணவன்.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் முறை தவறிய உறவுகளால் கொலை போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவது தமிழகத்தை அதிர வைத்து வருகிறது. அதே நேரத்தில் எந்தவித குற்றமும் செய்யாமல் வெறும் சந்தேகத்தால் பிரிந்த குடும்பங்களும் பல உண்டு.
சில நேரங்களில் சந்தேகம் கொலை வரை கூட செல்லும்.. அப்படி ஒரு சம்பவம் தான் கும்மிடிப்பூண்டியில் அரங்கேறி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியை அடுத்த தூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா தான் தனது கணவரால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

திருவள்ளூர் கொலை
39 வயதான பெயிண்டர் சிலம்பரசன் தான் பிரியாவின் கணவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் 7 மற்றும் 6 வயதில் இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சிலம்பரசன் ப்ரியா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. தனது மனைவி யாருடனோ தொடர்பில் இருக்கிறார் என சந்தேகம் அடைந்த சிலம்பரசன் அவருடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென பிரியா மாயமானார்.
மனைவி கொலை
இது குறித்து கேட்ட தனது உறவினர்களிடம் தனது மனைவிக்கும் தனக்கும் சண்டை என்பதால் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார் எனக் கூறியிருக்கிறார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரியாவை தங்களது வீட்டுக்கு அழைத்துள்ளனர் அவரது பெற்றோர். ஆனால் பிரியா வீட்டில் இல்லை என கூறி சமாளித்திருக்கிறார். அப்போது பிரியா இரு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வேறு யாரோ ஒருவர் சென்று விட்டார் எனவும் கூறியுள்ளார்.
கணவன் கைது
இதனிடையே அப்பாவுடன் சண்டையிட்டதில் இருந்தே தங்களது தாயை காணவில்லை என குழந்தைகளும் பிரியாவின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரியாவின் அப்பாவான சீனிவாசன் ஆரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிலம்பரசன் மீது சந்தேகம் கொண்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரியாவை கொலை செய்தது தெரியவந்தது.
காவல் விசாரணை
தொடர்ந்து போலீசாரிடம் கொலை தொடர்பான வாக்குமூலத்தை சிலம்பரசன் அளித்துள்ளார். கொல்லப்பட்ட பிரியாவுக்கும் சிலம்பரசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேறு ஒருவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட சிலம்பரசன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு செல்வதை பிரியா வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சடலம் கண்டுபிடிப்பு
அப்போது ஆத்திரமடைந்த சிலம்பரசன் பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு உடலை ஒரு பிளாஸ்டிக் பேரலில் அடைத்து அதனை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று எளாவூர் பாலம் பகுதியில் புதைத்துள்ளார். இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் எளாவூர் மைதானம் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட பிரியாவின் உடலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். தொடர்ந்து உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியைக் கொலை செய்து விட்டு இரு மாதங்களாக ஒன்றும் தெரியாதது போல் சுற்றுத் திரிந்த சிலம்ரசன், சமீபத்தில் தீபாவளிப் பண்டிகையும் மகிச்சியோடு கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications